பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/359

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


344 அகநானூறு - மணிமிடை பவளம்

பெண்டிர், அலர் கூறுவோர். 14. சாய் இறை வளைந்த சந்து: அக்குள்.

உள்ளுறை: வேட்டைக்குப் போன கானவன் வேட்டைப் பொருளான தந்தத்துடன், முத்தும் பொன்னும் மணியும் பெற்று, சந்தனக் காவுமரத்திலே கட்டித் தூக்கிவரும் எதிர்பாராத நிகழ்ச்சிபோலக், கண்டு காதலித்த தலைவனும், தலைவியைக் களவிலே கூடப்பெற்றதுடன், பெற்றோர் ஒப்புதலும், ஊரவர் வாழ்த்தும், வரைந்துவந்து மணம் நேர்ந்ததனால் வரும் இல்லற வாழ்வும் ஒருங்கே பெற்றனன் என்க.

விளக்கம்: இல்லுறை தெய்வத்துக்குப் பலியிட்டு வழிபடுவது என்பது பண்டை நாள் மரபு இந் நாளினும் கிராமத்து மக்கள், திருமண நாளுக்கு முன்பாகத் தம் வீட்டிலேயுள்ள தெய்வங்களுக்குப் படைப்புப் படைத்து வழிபாடு செய்து வருகின்றனர். மணப் பெண்ணுக்கு தம் குடும்பத்து முன்னோரின் வாழ்த்தும் கிடைக்க வேண்டும் என்பது இம்மரபின் பொருளாயிருக்கலாம். தமிழகத்து மலைகளுள் பொன்னும் மணியும் உளவென்பதும், முற்றிய யானைத் தந்தம் முத்துடைத்து என்பதும் அறிக.

மேற்கோள்: தெய்வம் வாழ்த்தலும் என்ற பகுதியில்,

‘களவலராயினும் என்னுஞ் சூத்திர உரையினுள் இச் செய்யுளைக் காட்டி, யாய் தெய்வம் பராயினாள் என்பதுபடக் கூறியது’ என்று கூறுவர் நச்சினார்க்கினியர். அவர் கருத்துப் படி, ‘யாய் தெய்வத்தை வணங்கிப் பலிக்கடன் செலுத்துவா ளாயினாள் என்க.

283. காடும் இனியது ஆகுக!

பாடியவர்: மதுரை மருதனிள நாகனார். திணை: பாலை. துறை: உடன்போக்கு வலித்த தோழி தலைமகற்குச் சொல்லியது.

(தலைமகள், தலைமகனுடன் இல்லத்துக் காவலையும் கடந்து உடன்போக்கிலே சென்றுவிட முடிவு செய்தனள். அதனைத் தலைவனிடம் சென்று தோழி உரைக்கிறாள். ‘வெம்மையான காடும் இனிதாக விளங்குக!” என்றும் வாழ்த்துகிறாள்.)

நன்னெடுங் கதுப்பொடு பெருந்தோள் நீவிய! நின்னிவண் ஒழிதல் அஞ்சிய என்னினும், செலுவுதலைக் கொண்ட பெருவிதுப்பு உறுவி பல்கவர் மருப்பின் முதுமான் போக்கிச், சில்உணாத் தந்த சீறுர்ப் பெண்டிர் 5