பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மூலமும் உரையும் புலியூர்க்கேசிகன்-21

உதாரணமாகக் காட்டி, ‘இதன் கருத்தாவது, நாம் இவர் இருளிடைவருதல் ஏதம் அஞ்சி அகன்று அவலித்திருப்பவும், என்னையும் நின்னையும் கேளாது என்னெஞ்சு போவானேன் என்றவாறாயிற்று, என்பர் பேராசிரியர்.

-- “செல்வர் மனத்தின் ஓங்கி என்னும் சிந்தாமணிச் செய்யுள் உரையில், ‘யானைக் கயிற்றுப் புறத்தன்ன கன்மிசைச் சிறுநெறி’ என்பது, வழியின் ஒக்கத்தைக் கூறியதாக நச்சினார்க்கினியர் கொள்வர். -

பாடபேதங்கள்: 3. கோள்வரின். 6. இன்னண. 13. படுங் குழியியவின்.

129. மனம் திறந்து சொன்னார்!

பாடியவர்: குடவாயில் இரத்தனார். திணை: பாலை. துறை: பிரிவிடை வேறுபட்ட தலைமகளுக்குத் தோழி சொல்லியது.

(பிரிவிடை வேறுபட்டாள் தலைவி. அவளுக்கு, முன்னர்க் களவுக் காலத்திலே தலைவன் தன் காதல்மிகுதியைத் தெரிவித்துச் சொன்னதைக் காட்டி, அவன் வருவான் என்கிறாள் தோழி)

‘உள்ளல் வேண்டும் ஒழிந்த பின் என நள்ளென் கங்குல் நடுங்குதுணை யாயவர் நின்மறந்து உறைதல் யாவது? புல் மறந்து அலங்கல் வான்கழை உதிர்நெல் நோக்கிக்’ கலைபிணை விளிக்கும் கானத்து ஆங்கண், 5

கல்சேர்பு இருந்த கதுவாய்க் குரம்பைத் தாழிமுதற் கலித்த கோழிலைப் பருத்திப் பொதிவயிற்று இளங்காய் பேடை ஊட்டிப், போகில்பிளந் திட்ட பொங்கல் வெண்காழ் நல்கூர் பெண்டிர் அல்குற் கூட்டும் 1 O கலங்குமுனைச் சீறும் கைதலை வைப்பக், கொழுப்புஆ தின்ற கூர்ம்படை மழவர், செருப்புடை அடியர், தெண்சுனை மண்டும் அருஞ்சுரம் அரிய வல்ல; வார்கோல் திருந்திழைப் பனைத்தோள் தேன்நாறு கதுப்பின், 15 குவளை உண்கண், இவளொடு செலற்கு என நெஞ்சுவாய் அவிழ்ந்தனர் காதலர்அஞ்சில் ஓதி ஆயிழை! -நமக்கே.