பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/360

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மூலமும் உரையும் புலியூர்க்கேசிகன் : 345

திரிவயின், தெவிட்டும் சேண்புலக் குடிஞைப் பைதன் மென்குரல் ஐதுவந்து இசைத்தொறும், போகுநர் புலம்பும ஆறே ஏகுதற்கு அரிய ஆகும்என் னாமைக், கரிமரம் கண்அகை இளங்குழை கால்முதற் கவினி, 1 O

விசும்புடன் இருண்டு, வெம்மை நீங்கப், பசுங்கண் வானம் பாய்தளி பொழிந்தெனப், புல்நுகும்பு எடுத்த நல்நெடுங் கானத்து, ஊட்டுறு பஞ்சிப் பிசிர்பரந் தன்ன, வண்ண மூதாய் தண்நிலம் வரிப்ப, 15

இனிய ஆகுக தணிந்தே -

இன்னா நீப்பின் நின்னொடு செலற்கே.

தலைவனே! தலைவியின் நலம் பொருந்திய நீண்ட கூந்தலுடனே, பெருந் தோளினையும் தழுவிய நின்னைவிட்டுத் தனியாக இவ்விடத்தே தலைவி இருத்தலுக்கு யான் அஞ்சினேன். அவளோ, அத்தகையவளான என்னினும், உடன்போக்கினை மேற்கொண்ட பெரிதானவோர் விரைவினை உற்றிருப்பவள்

ஆயினாள். துன்பத்தைத் தருவதான பிரிவினைக் காட்டினும்,

நின்னோடு செல்வதற்கே உள்ளங் கருதினாள். அதனால்,

பல கவறுகள் பொருந்திய கொம்பினையுடைய முதிய மான்களைத் துரத்திவிட்டு, அங்குக் கிடைக்கும் சிறிய உணவுப் பொருள்களைக் கொணர்பவர், காட்டகத்துச் சிற்றுார்ப் பெண்டிர்கள். அவர்கள் திரியும் இடத்திலே, சேய்மையான இடத்திலேயுள்ள பேராந்தையின் வருத்தம் தருகின்ற குரலானது மெல்லென வந்து ஒலிக்குந்தோறும், வழிச்செல்வார்அதனைக் கேட்டு அச்சமுற்றவராக வருந்துவர். அத்தகைய சுரநெறிகள், அவளாற் செல்வதற்கு அரியனவாகும் என்பதனைக் கருதாதவளும் ஆயினள். அதனால்,

கோடையிலே கரிந்துபோன மரங்களின் கணுக்களிலே யிருந்தும், இளைய துளிர்கள் அடிமுதல் நுனிவரை கிளைத்தன வாக அழகுடன் தோன்றுமாக காட்டின் வெம்மை முற்றும் நீங்கிப் போகுமாக வானமெல்லாம் ஒருங்கே இருள் கொண்டு தோன்றுமாக பசுமையைத் தன்னிடத்தே கொண்ட மேகமானது பரந்த துளியினைக் சொரியத் தொடங்குமாக! அதனால், புற்கள் குருத்துவிட்டு எழுக! அத்தகைய தண்மை விளங்கும் நெடிய காட்டினிடத்தே, செந்நிறம் ஊட்டிய பஞ்சின் பிசிரானது எங்கும் பரவலாகக் கிடப்பதுபோலச், செந்நிறமுள்ள