பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/361

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
346
அகநானூறு - மணிமிடை பவளம்
 

தம்பலப் பூச்சிகள், மழையாற் குளிர்ந்த நிலத்திலே பரவி அழகுபடுத்திக் கொண்டிருக்குமாக இப்படியாக, நீங்கள் செல்லும் காடும் தன் வெப்பந்தணிந்து செல்வதற்கு இனிமையுடையதாக ஆகுமாக!

என்று, உடன்போக்கு வலித்த தோழி தலைமகற்குச் சொன்னாள் என்க.

சொற்பொருள்: 1. நீவிய தடவிய தழுவிய எனக் கொள்க. 3.பெருவிதுப்பு பெரிதான விரைவுகுறித்த விருப்பம். 5. சில்லுணா - சிறிதான உணவுப் பொருள்கள்; புல்லரிசி முதலியன. சீறுர் - காட்டகத்துச் சீறுார். 6. தெவிட்டும் - ஒலிக்கும். குடிஞை - பேராந்தை, 7. ஐதுவந்து மெல்லென வந்து. 10. கண் அகை கணுக்களிலே கிளைத்த 12. பாய் தளி - பரவும் துளிகள், 4. ஊட்டு பஞ்சி - வண்ணம் ஊட்டும் பஞ்சு.

விளக்கம்: ‘தனித்திருத்தலுக்கு அஞ்சிய யானே உடன் போக்கிற்கு அவளைத் தூண்டுதற்கு நினைக்க, அவளே எனக்கும் முற்பட்டுப் போதலாகிய விரைந்த நினைவு உடையவளாயினாள். என்க. தோழி, அவர்கள் உடன்போக்கிற் செல்வதை விரும்பினாலுங்கூட, காடும் வெம்மை மாறி இனியதாகுக எனவும் வாழ்த்துகின்றாள். இது, காட்டின் வெம்மையை மனம் நினைந்து கூறியதாகும்.

பாடபேதங்கள்: 1. பெருந்தோள் நீவி. 9. ஏகுநர்க்கு 25. தண்ணில்ம் பரிப்ப.

284. அவள் இருக்கும் ஊர்!

பாடியவர்: இடைக்காடனார் திணை: முல்லை. துறை: வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது; தன் நெஞ்சிற்குச் சொல்லியதுமாம்.

(தன் தலைவியைப் பிரிந்து வேந்துவினை முடிக்கச் சென்றிருந்த தலைவன், அவ் வினையும் முடிந்து தன் காதலியின் நினைவும் மேலெழ இப்படித் தன் நெஞ்சிற்குச் சொல்லிக்கொள்ளுகிறான். அல்லது, வினைமுடித்தபின், தன் தேர்ப்பாகனுக்குத் தேரினை விரைவில் செலுத்துமாறு கூறியதுமாகும்.)

சிறியிலை நெல்லிக் காய்கண் டன்ன
குறுவிழிக் கண்ண கூரல்அம் குறுமுயல்
முடந்தை வரகின் வீங்குபீள் அருந்துபு,