பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/363

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


348 அகநானூறு - மணிமிடை பவளம்

தோட்டம். புல்வாய் - மான் 11. காமர் - அழகிய 12 தலை மயங்கிய - பெரிதும் மயக்கமுற்ற.

உள்ளுறை: வீட்டவர் வளர்க்கும் குறுமுயலானது, முல்லை நிலத்துள்ளே புகுந்து வரகுக் கதிர்களை மேய்ந்து, புதரிலே கிடந்து உறங்கிவிட்டு, வீட்டு முற்றத்தே இருக்கும் சிறியநீர்ச் சாலிலே சென்று, தன்துணையோடும் நீருண்ணும் என்றனன். அதுபோலவே, தானும் வினை முடிவுற்றதாகலின் வீடு செல்லும் பெருவிருப்பம் உடையவனாயினன் என்று சொல்வது கருதி .

285. பன்முறை தழுவுவோம்!

பாடியவர்: காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார். திணை: பாலை. துறை: உடன் போக்கு உடன்படுவித்த தோழி, தலைமகட்குச் சொல்லியது.

(தலைமகனுடன் உடன்போக்கிலே தலைவியும் சென்று விடுவதற்கான ஏற்பாடுகள் பலவற்றையும் செய்துவந்த தோழி, தலைவியிடம் இவ்வாறு கூறி, அவளைத் தழுவிக் கொண்டு, வழியனுப்பி வைக்கின்றனள்.) -

“ஒழியச் சென்மார், செல்ப’ என்று, நாம் அழிபடர் உழக்கும் அவல நெஞ்சத்து எவ்வம் இகந்துசேண் அகல, வைஎயிற்று ஊன்நகைப் பிணவின் உறுபசி களைஇயர், காடுதேர் மடப்பினை அலறக் கலையின் 5

ஒடுகுறங்கு அறுத்த செந்நாய் ஏற்றை வெயில்புலந்து இளைக்கும் வெம்மைய, பயில்வரி இரும்புலி வேங்கைக் கருந்தோல் அன்ன

W கல்எடுத்து எறிந்த பல்கிழி உடுக்கை

உலறுகுடை வம்பலர் உயர்மரம் ஏறி, 10

ஏறுவேட்டு எழுந்த இனம்தீர் எருவை ஆடுசெவி நோக்கும் அத்தம், பனைத்தோள் குவளை உண்கண் இவளும் நம்மொடு வரூஉம் என்றனரே, காதலர் வாராய், தோழி! முயங்குகம் பலவே. 15

“நாம் இவ்விடத்தே தனித்திருக்கவும், வரைந்து கொள்ளுதற்கான பொருளினை ஈட்டி வருவதற்கு நம் காதலர் செல்வார்” என்று, நாம் மிகுதியான துன்பத்தினாலே இதுவரையும் வருந்தினோம். தோழி! ஆற்றாமை கொண்ட நம்