பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/364

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மூலமும் உரையும்
புலியூர்க்கேசிகன் ★ 349
 

நெஞ்சத்தின் துன்பமெல்லாம் முற்றவும் நீங்கத் தொலைவிற்கு நாமும் அவருடன் செல்லுமாறும், இப்போது சமயம் வந்து வாய்த்தது.

கூர்மையான பற்களையுடையதான, ஊனை விரும்புகின்ற தன்னுடைய பெண் நாய் கொண்டிருந்த பசியினைப் போக்குமாறு, தன் கலையினைக் காடெல்லாம் தேடிக் கொண்டிருக்கின்ற இளைய பெண்மான் அலறும்படியாக, அக்கலைமானின் ஓடிச் செல்லுவதற்குரிய தொடையினைக் கடித்து அதனை வீழ்த்தியது அச் செந்நாயின் ஆண். அப்படி வீழ்த்திய பின், வெயிலினாற் களைப்புற்று, பெரிதும் இளைத்துக் கொண்டே அது நின்றிருக்கும்.

வரிகள் பொருந்திய உடலுடைய பெரிய புலியினது கருமையான தோலினைப்போல விளங்கும் கல் உறாய்ந்து கிழித்தலினால், பரவலாகக் கிழிந்த உடையினராயும், உலறிய குடையினராயும் வழிச்செல்லும் புதியவர்கள், அந்தச் செயலால் எழுந்த ஆரவாரத்திற்கு அஞ்சியவர்களாயினர். உயர்ந்த மரத்தின்மேலே ஏறி இருந்துகொண்டு, தன்னுடைய உணவினை விரும்பி இனந்தினின்றும் பிரிந்து வந்த எருவைச் சேவலானது, வானிலே வட்டமிட்டுப் பறக்கும் தன்மையினை நோக்குபவர் களாக இருப்பாராயினர்.

“அத்தகைய காட்டின்பாற் செல்லும் வழிகளிலே, பணைத்த தோளினையும், குவளைமலர் மையுண்டது போன்ற கண்களையும் உடைய இவளும் நம்மோடுங்கூட வருவாளாக” என்றனர்.நம் தலைவர்.ஆகையால், நீயும் என்னருகே வருவாயாக நாமும் பன்முறை தழுவிக் கொள்வோமாக. (தழுவுதல் அன்புடையார் விடைபெற்றுச் செல்லுங் காலத்தே மேற்கொள்வது);

என்று, உடன்போக்கு உடன்படுவித்த தோழி தலைமகட்குச் சொன்னாள் என்க.

சொற்பொருள்: 2 அழி படர் - மிகுதியான வருத்தம்; அழிவிற்கு ஆட்படுத்தும் பெருந்துன்பம். 6. ஓடு குறங்கு - ஓட்டத்திற்குரிய தொடை, 7. இளைக்கும் வாய்நீர் வடியப் பெருமூச்சுவிட்டு இளைத்திருக்கும். 9. கல் எடுத்து எறிந்ததனால் எனவும் கொள்ளலாம். 10. சோற்றுக் குடைகள் கிழிந்து சோறு சிந்திப் போக, அவை எல்லாம் உலறிய குடைகளாயின என்க.

விளக்கம்: செந்நாய் மானின் தொடையைக் கடிக்கவும் அதனால் எழுந்த ஆரவாரத்தினாலே ஓடித் தப்ப முயன்ற வழிச்