பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/368

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மூலமும் உரையும் புலியூர்க்கேசிகன் : 353

நாட்பலி மறந்த நரைக்கண் இட்டிகை, புரிசை மூழ்கிய பொரி அரை ஆலத்து ஒருதனி நெடுவீழ் உதைத்த கோடை துணைப் புறா இரிக்கும் தூய்மழை நனந்தலைக், கணைக்கால் அம்பிணை ஏறுபுறம் நக்க, 1 O

ஒல்குநிலை யா அத்து ஓங்குசினை பயந்த, அரம்புவந்து அலைக்கும் மாலை, நிரம்பா நீள்.இடை வருதுதும் யாமே.

வளைகள் அணிந்த தன் முன்கைகளின் தொகுதியான விரல்களைக் குவித்து, நோன்பு மேற்கொண்ட நெஞ்சத்துடனே, ஞாயிறே தனக்குத் துணையாகக் கருதி வருந்தியவளாகவே அவள் இருப்பாளோ? நெஞ்சமே அவள் இரங்கத்தக்கவளே!

ஆண் மரை உராய்ந்தமையால் அசைந்து கொண்டிருக்கும் நிலையினதாகிய, கரிய அடிபொருந்திய கந்தினையுடைய, சுரைக் கொடி படர்ந்திருக்கும் ஊர் அம்பலத்தின் கண்ணே, அழகிய குடியிருப்பினையுடைய சிற்றுாரிலே உள்ளவர்கள், நாள்தோறும் இடுகின்ற பலியினையும் இடாது மறந்தமையால், அவ்விடத்துப் பலிபீடமும் வெளிதாகிக் கிடக்கும். அதனைக்கண்ட கோடைக் காற்றானது, அந்த மன்றத்தைக் கவிந்திருக்கும் பொரிந்த அடிமரத்தினையுடைய ஆலமரத்தின் ஒன்றாய்த் தனித்த விழுதினை அசைத்து மோதி, அம் மரத்தின்கண் துணையுடன் மேவியிருந்த புறாவினை அப் பலிபீடத்திலே அடித்து வீழ்த்தும். அத்தகைய இடமாகிய மழையற்ற அகன்ற காட்டகத்தின் இடத்திலே,

அசையும் நிலையினைக் கொண்ட யாமரத்தின் உயர்ந்த கிளைகள் உதவிய சுருங்கிய வரிப்பட்ட நிழலிலே தங்கித், திரண்ட கால்களையுடைய அழகிய பிணையானது தன் ஏற்றின் முதுகை நக்கிக் கொண்டிருக்க, அதனைப் பார்க்கவும், குறும்பாக வந்து நம்மை வருத்தும் மாலைப் பொழுதிலே, இந்தத் தொலையாத நெடுவழியிலே, அவனைப் பிரிந்துவந்த வருத்தம் மிகுதியாக யாம் தனித்திருந்து வருந்துகின்றோம். (இனி, என் செய்வோம்?); .

என்று? பிரிந்து போகாநின்ற தலைமகன் இடைச்சுரத்து நின்று, தன் நெஞ்சிற்குச் சொன்னான் என்க.

சொற்பொருள்: 1. தொடி - வளையல், தொகு விரல் - தொகுதியான விரல்கள். குவைஇ - குவித்து. 2. படிவ நெஞ்சம் நோன்பு கொண்ட நெஞ்சம். பகல் ஞாயிறு. துரங்கு நிலை -