பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


22 அகநானூறு - மணிமிடை பவளம்

அழகிய சிலவாகிய கூந்தலையும், ஆராய்ந்த ஆபரணங் களையும் உடைய தலைவியே!

இவளை நாம் பிரிந்து போனபின், இவள் இரந்துபாட்டை நினைந்து நாம் இரங்க வேண்டுமன்றோ என நினைந்து, நள்ளென்னும் இரவில், நடுங்குந் துணையினரான நம் தலைவர்;

தான் புல்லுத் தின்னுதலை மறந்து, காற்றால் அசைந்தாடும் பெரிய மூங்கிலினின்றும் உதிரும் நெல்லை நோக்கிக் கலைமான் தன் பிணையை அழைக்கும் கானத்திடத்தே; -

கற்பாறையோடு சேர்ந்து அமைந்திருந்த வடுப்பட்ட சிற்றில்லிலே, -

தாழியிடத்தே செருக்கி வளர்ந்த கொழுவிய இலையை யுடைய பருத்தி மொட்டினிடத்துள்ள இளங்காயைத் தன் பேடைக்கு ஊட்டி, ஆண்பறவைகள் கொத்திப் பிளந்து போட்ட பஞ்சி பொங்கி எழுந்த, வெளிய அப் பருத்திக் கொட்டையை, வறுமையுற்ற பெண்டிர் தம் அல்குலிடத்துக் கூட்டா நிற்கும்;

கலங்குதற்குக் காரணமான போர்முனையையுடைய சிறிய ஊரினர் கையைத் தலைமீது வைத்து வருந்தும்படி:

அவருடைய கொழுத்த ஆவைக் கவர்ந்து சென்று தின்ற கூரிய படையையுடைய மழவர், செருப்பினைப் பூண்ட அடியின ராய்த், தெள்ளிய சுனைக்கண் நீரருந்த நெருங்கும் அரிய சுரமானது;

நீண்ட கோற்றொழில் அமைந்த திருந்திய ஆபரணங் களையும்,மூங்கில் போன்ற தோளையும், வண்டுபடுகின்ற கூந்தலையும், குவளைபோன்ற மையுண்ட கண்ணையுமுடைய இத் தலைவியுடன் செல்லுவதற்கு அரியவல்லவாய் இராநின்றன என்று, காதலர் நமக்குத் தம் மனக்கருத்தை வெளியிட்டனர்;

அவ்வாறாகியபோது, நின்னை மறந்து நம் காதலர் வேற்று நாட்டிடத்தே தங்குதல் என்பது எவ்வாறு கூடும்?

என்று, தலைமகட்குத் தோழி தலைமகன் பிரிந்த காலத்துச் சொன்னாள் என்க.

சொற்பொருள்: 1. ஓதி - மகளிர் கூந்தல். 2. நள்ளென் கங்குல் - நள்ளென்னும் இரவு. 3. புல் மறந்து - புல்லுண்ணலை மறந்து. 4. அலங்கல் - அசைந்தாடும். வான்கழை - பெரிய மூங்கில். 6. கல்

சேர்பு இருந்த கற்பாறையோடு சேர்ந்திருந்த, கதுவாய்க் குரம்பை-வடுப்பட்டசிற்றில்.7. கலித்த-செருக்கிவளர்ந்த கோழ்