பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/370

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மூலமும் உரையும் புலியூர்க்கேசிகன் 355

பார்ப்பின் தந்தை பழச்சுளை தொடினும், நனிநோய் ஏய்க்கும் பனிகர் அடுக்கத்து, மகளிர் மாங்காட்டு அற்றே துகள் அறக் 15

கொங்தோடு உதிர்த்த கதுப்பின், அம்தீம் கிளவித் தந்தை காப்பே!

தலைவனே! நின் மலையகத்துச் சந்தனம் பூசப்பெற்ற அழகிய விளக்கம் பொருந்திய மார்பினையாக நீயும் உள்ளனை, மலைச்சாரலிலுள்ள வேங்கைமரத்தின் மிகுதியான கிளை களிலேயுள்ள பூக்களால் தொடுத்த, முருகனும் விரும்புமாறு கொள்ளும் அழகிய கண்ணியினை உடையவனாகவும் இருக்கின்றனை எரியானது தின்றழித்த கொல்லையினிடத்தே, முற்றிக் கதிர்வளைந்த தினைகளையுடைய புனத்திலே, துன்பமிகுதி உடையவனாக நாடோறும் தவறாது வருதலையும் ச்ெய்கின்றனை!

ஆறலைப்போராகிய கொடியவர்கள் நெருங்கித் தங்கியிருக்கும் நெடிதான பெரிய குன்றத்திலேயுள்ள குறுகிய வழியிலே, விளங்கும் அருவியின் ஒலி முழக்கம் இடையிட்டுக் கேட்கும். அந்த அருவி அரிய மலையினின்றும் வீழ்ந்து கொண்டிருக்கும் இடமோ மிகவும் அச்சந்தோன்றும் இடம் ஆகும். அவ்விடத்தே, சிறு தூறுகளுள் ஒன்றிலே இருக்கும் மெல்லிய தலையினையுடைய மந்தி பசியினால் வருந்தியிருக்க, அதன் குட்டிக்குத் தந்தையான கடுவன் பலாச்சுளையினைச் சென்று தோண்டும். தோண்டினவிடத்திலே அதற்கும் மிகுந்த துன்பம் வந்து சேருமாறு நேர்கின்ற, நடுக்கம் மிகுந்த அத்தகைய மலையடுக்கத்திலே, தேவகன்னியர்கள் வாழ்கின்றனர் என்பர். அத்தகைய மலையிடத்தேயுள்ள ‘மாங்காடு’ என்னும் காவல் மிகுந்த ஊரைப் போன்றது. -

குற்றம் ஏதும் இல்லாமல், கொத்தோடு பூக்களை உதிர்த்து அணிந்த கூந்தலையும், அழகிய இனிதான பேச்சினையும் உடைய இவளுடைய தந்தையின் காவல் மிகுந்த பெருமனை.

அங்ஙனம் இருப்பவும், கனிகள் முதிர்ந்துள்ள பக்கமலைச் சாரல்களிலே, எம்முடைய தனிமையைக் காண்பதனால், நீ எங்களின் அருமையினை உணராது எமக்கு எளிமை செய்தனையும் ஆயினாய். நின் அத்தகைய உள்ளம் சிறப்பதாக! நீயும் சென்று வருவாயாக! (தம் குடிப்பெருமை உரைத்து இரவுக் குறிவாய்த்தல் அரிதாகலின், மணம் வேட்டலே இனிச் செய்தற்குரியது என்றனள்);