பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/371

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


356 அகநானூறு - மணிமிடை பவளம்

என்று, பகற்குறிக்கண் தோழி செறிப்பறிவுறீஇ வரைவு கடாயினாள் என்க. -

சொற்பொருள்: 2. அம் பகட்டு - மார்பு அழகிய விளக்கத்தினையுடைய மார்பு. 3. படுசினை - மிகுந்த கிளைகள். 4. முருகு - அழகு முருகனும் ஆம் எரிதின்கொல்லை எரியுண்ட கொல்லை. இறைஞ்சிய ஏனல் - கதிர் முற்றித் தலை தாழ்ந்து வளைந்திருக்கும் தினைப்புனம். 8. எண்மை - எளிமை. 9. கொடியோர் ஆறலைகள்வர்; கொடிய தன்மை உடையவர் ஆகலின் கொடியோர் எனப்பட்டனர் 11. படாஅர் - தூறு. 12. கயந்தலை - மென்தலை 15. மகளிர் - தேவ மகளிர்; சூரர மகளிர் என்றும் கொள்வர். 17. காப்பு காவல் உள்ள இடம் இல்லம்.

விளக்கம்: தலைவியின் குடும்பத்தின் தகுதி கூறி. நீ அவளை அடைதல் எளிதென எண்ணாதே எனக் கூறுவதன் மூலமும், இல்லம் காப்புடையது எனக் கூறுவதன் மூலமும் இரவுக்குறி மறுத்து, இச்செறிப்பும் அறிவுறுத்தித் தோழி வரைவு கடாயினாள் என்க.

பாடபேதங்கள்: 6 எவ்வம் கூறிய.16. கொங்கோடு. உதிர்த்த: கொங்கு - பூந்தாது. ;

289. முத்துச் சொரியும் கண்கள்!

பாடியவர்: எயினந்தை மகன் இளங்கீரனார் திணை: பாலை துறை: பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

(தன்னுடைய உயிர்த் துணைவியைப் பிரிந்து தன் வினை மேற் செல்லுதலுற்ற தலைமகன் ஒருவன், இடை வழியிலே, அவளைப் பிரிந்த பெருவருத்தம் நெஞ்சிலே சூழ்ந்து வருத்தத்தன் நெஞ்சிற்கு இவ்வாறு கூறுகின்றான்;) -

சிலைஏ றட்ட கணைவீழ் வம்பலர் உயர்பதுக்கு இவர்ந்த ததர்கொடி அதிரல் நெடுநிலை நடுகல் நாட்பலிக் கூட்டும் சுரனிடை விலங்கிய மரன்ஓங்கு இயவின், வந்து, வினை வலித்த நம்வயின், என்றும் 5

தெருமரல் உள்ளமொடு வருந்தல் ஆனாது, நெகிழா மென்பிணி வீங்கிய கைசிறிது அவிழினும், உயவும் ஆய்மடத் தகுவி, சேண்உறை புலம்பின் நாள்முறை இழைத்த திண்சுவர் நோக்கி, நினைந்து கண்பனி, 1 O