பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/372

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மூலமும் உரையும் புலியூர்க்கேசிகன் 357

நெகிழ்நூல் முத்தின், முகிழ்முலைத் தெறிப்ப, மைஅற விரிந்த படைஅமை சேக்கை ஐமென் தூவி அணைசேர்பு அசைஇ மையல் கொண்ட மதன்அழி இருக்கையள் பகுவாய்ப் பல்லி படுதொறும் பரவி; 15

‘நல்ல கூறு என நடுங்கிப் புல்லென் மாலையொடு பொரும்கொல் தானே?

ஆறலை கள்வர் வில்லிலே கோத்து எய்த கணையால் வழிப் போக்கராகிய புதியவர்கள் வீழ்ந்துபட, அவர்கள் உடல்மேல் எழுப்பிய கற்குவியல்களிலே ஏறிப் படர்ந்த நெருங்கிய கொடிகளையுடைய அதிரலானது, உயர்ந்த நிலையினையுடைய நடுகல்லின் நாட்பலிக்குப் பூச்சூட்டப் பெற்றதாக விளங்கும். அத்தகைய சுர நெறியிலே, குறுக்கிட்ட மரங்கள் ஓங்கி வளர்ந்துள்ள வழியிலே வந்து, வினையின்பால் உறுதிகொண்ட நம்மிடத்தே, என்றும் நினைந்து சுழலும் உள்ளத்துடன் வருந்துதல் ஒன்றுமட்டுமே அமையாது, மென்மையான பிணிப்பு மிகுந்த கை நெகிழ்ந்து சிறிதளவே விலகினாலும்

வருத்தங்கொள்பவளான நம் தலைவியானவள்,

நாம் தொலைவிடத்தே வாழ்தலான தனிமையால், நாள் தோறும் முறையாக இழைத்த கோடுகளையுடைய திண்மை யான சுவரினை நோக்கி, நம்மையே நினைந்து நூலறுந்து வீழ்கின்ற முத்துக்களைப்போல, முலைமுகங்களிலே கண்ணிர் பட்டுத் தெறித்துவீழக், குற்றமற விரிந்து கிடக்கும் படுக்கையமைந்த பள்ளியிலே, மென்மையான அன்னச் சிறகால் ஆகிய அணையினைச் சேர்ந்து தங்கியவளாக, மயக்கங் கொண்டவளாகத் தன் வலியழிந்த இருக்கையளாக ஆவாளோ?

பிளந்த வாயினையுடைய பல்லி ஒலிக்குந்தோறும் தெய்வத்தைத் தொழுது, நன்மையே கூறு’ எனச் சொல்லி மனம் நடுங்கியவளாகப், பொலிவுற்ற மாலைக் காலத்தினோடு போராடிக் கிடந்தும் தவிப்பாளோ? (நெஞ்சமே! அவள் நிலைதான் யாதோ? யான் ஏது செய்வேன்?)

என்று பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொன்னான் என்க. •

சொற்பொருள்: 1. சிலையேறு அட்ட வில்லிலே கோத்து எய்த அம்புகளால் கொன்ற.2 பதுக்கு-பதுக்கைகள். ததர் கொடி - நெருக்கமாகத் தழைத்த கொடி 3. நெடுநிலை - நீண்ட நிலை; உயரமான என்பது பொருள், 4. விலங்கிய - குறுக்கிட்ட இயவு -