பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/390

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மூலமும் உரையும் புலியூர்க்கேசிகன் k_375

அந்தக் கருங்கடலின் நீலநிறத்தை ஒப்ப நீலமணி போன்று வானம் இருண்டதாகத் தோன்றும் மயக்கந்தரும் மாலைக் காலத்திலே, செறிவுபட மலர்ந்துள்ளவேங்கையின் ஒளியுடைய தளிர்கள் விளங்கும் தழைதல் பொருந்திய பெரிய கிளையிலே, தண்மையான துளிகளை அசையும் காற்றுத் தடவிக் கொண்டே வந்துகொண்டிருக்கும். அத்தகைய வளநாடனே!

தன்னுடைய பகையைக் கொன்ற பின்னும், தன் சினம் தணியாததாகி, அதனை வெற்றிகொண்டும் தன்னுடைய மாறுபாடு குறையாமல், பெரிய பெண்யானைக் கூட்ட்ங்களை யுடைய தன் இனத்துடனேயும் கலந்து கொள்ளாமல், பெருமழை போலும் மதநீராற் செருக்குடையதாகி, வளமலை யிலேயுள்ள பெரிய களிறானது இயங்கிக் கொண்டிருக்கும் பெரிய காட்டு நெறியிலே,

மிகுதியான இருள் துண்டுபடுமாறு வெள்ளிய வேலினைக் கையேந்தியவனாக, மெல்லிய கட்டவிழ்ந்த பூமாலைக்கண் ஊதும் வண்டினை ஒட்டியவாறே, நடு நாளாகிய இரவுக் காலத்தே நீயும் வந்தனை. அந்த வருகையிலும். t மழைபோன்ற கள்வளத்தையும், விரைந்த தேரினையு முடைய எம் தந்தையின், காவலையுடைய பெரிய மனையிலே காம்மைப் பாதுகாத்தவளாகத் தங்கியிருக்கும் எம் தாய் அறிந்து கொள்ளுதலை அஞ்சி, நள்ளிரவிலேயும் மறைத்தலையுடைய உள்ளத்துடனே, என் காமத்தினைச் சொல்லாது, நீ என்னை மறந்தனை என்ற நின் கொடுமையினையே யான் கூறினேன்; அவ்விடத்தே,

நினைவு மேற்கொண்டு, ‘தோழி, வாழ்க! வருந்தாதே நம்மை விட்டுச் சென்றிருப்பவர் இனியும் காலந் தாழ்த்தாதவராகி, விரைவிலே வந்து சேருவர் என்று எனக்குத் தேறுதல் உரைந்து, ‘இரவெல்லாம் என் வருத்தத்திற்குத் துணையாகியிருந்தவள் என் தோழியாகிய இவளே. இவள் உவப்பு அடைந்ததுதான் எனக்கும் இனிதாக இருக்கின்றது.

என்று, இரவுக் குறிக்கண் தலைமகற்குத் தலைமகள் சொன்னாள் என்க.

சொற்பொருள்: 1. பயம் - நன்மை. திரு செல்வம் 2. வயங்குதொழில் - விளக்கமான நல்ல தொழில்கள். 1 - 5 நீலக் கடலினிடையே செங்கதிர் பொன்னொளியுடன் எழுவதுபோல, மலையில், நீலவானத்தே வேங்கையின் பெருங் கிளையிலே, ஒண்மையான தளிர் விளங்கிற்று என்க. 6. அசைவளி - அசைந்து