பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/392

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மூலமும் உரையும்
புலியூர்க்கேசிகன் ★ 377
 

நலம்கெழு திருமுகம் இறைஞ்சி, நிலம் கிளையா.
நீரொடு பொருத ஈர்இதழ் மழைக்கண்
இகுதரு தெண்பனி ஆகத்து உறைப்பக், 15

கால்நிலை செல்லாது, கழிபடர்க் கலங்கி,
நாநடுக் குற்ற நவிலாக் கிளவியொடு,
அறல்மருள் கூந்தலின் மறையினள், 'திறல் மாண்டு
திருந்துக மாதோ, நும்செலவு என வெய்து உயிராப்,
பருவரல் எவ்வமொடு அழிந்த 20

பெருவிதுப் புறுவி பேதுறு நிலையே.

தேக்கு மரத்தின் இலையானது, நெடிதாகக் கூப்பீட்டினைச் செய்யும் இயல்புடைய பருந்துகள் வானிலே வட்டமிட்டு, நாற்றம் பிடித்து எழுந்தாற் போன்று வானத்திடமெல்லாம் மறையுமாறு பரவும்; பின், அப்படிப் பறந்தவை பலவும் ஒன்றாக அகன்ற காட்டுவழிச் செல்வோரின் அறிவு மயக்கமடையுமாறு சுவடறியாது உதிர்ந்து பரவிக் கவர்த்த நெறிகளையெல்லாம் மறைத்து விடும்; அத்தகைய அகன்ற காட்டுவழியிலே கடந்து சென்று ஈட்டும் பொருள்பற்றிய செலவினை அவளுக்கு உரைத்தேன். அதனைக் கேட்ட அவள்.

வைகறைப் போதிலே வானத்து விளங்கும் நிலவினைப் போலத் தனிமைகொண்ட துன்பத்தோடு, மெல்ல மெல்லத் தன் புத்தழகினை எல்லாம் இழந்துபோன நலம் பொருந்திய திருமுகத்தினைக் கவிழ்ந்து கொண்டனள். கால்விரல்களாலே நிலத்தைக் கிளைத்தவளாகப் பொங்கி வரும் கண்ணிரோடும் மாறுபட்ட குளிர்ந்த இதழினையுடைய தண்மையான கண்களினின்றும், வீழ்கின்ற தெளிந்த கண்ணிரானது மார்பிலே துளித்து வீழ்ந்துகொண்டிருக்க, கால்கள் ஓரிடத்தே நிலை பரவாது மிகுதியான துன்பத்தால் கலக்கமுற்றுக் கருமணலைப் போன்ற தன் கூந்தலினிடையே தன் முகத்தை மறைத்துக் கொண்டனள்.

நா நடுக்கமுற்றுப் பேச்சும் எழமாட்டாத சொற்களோடு, ‘நும்முடைய செலவு அதன் திறனிலே மாட்சிமையுற்றுச் செப்பம் பெறுக!’ என்றும் கூறினள், வெம்மையாக நெடு மூச்சு விட்டவளாகத் துன்பத்தைத் தருகின்ற வருத்தத்தினாலே அழிவுற்ற, பெரிதான விரைவு கொண்டவளாக, மயக்கமுற்றும் நின்றனள்.

அவள் அங்ஙனமாகவும், வினைமேற் பிரிந்த உள்ளமானது பகலும் இரவும் அவள் என்முன் நின்ற அந்த நிலையினையே