பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/393

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


378 அகநானூறு - மணிமிடை பவளம்

முற்றவும் நினைத்திருக்க, ஊரை மறந்து வாழ்தலையும் சகித் திருப்போமானாலும், அவளுடைய அந்த நிலையினை மறந்து தங்குதல் என்பது நமக்கு அரிதாக இருக்கின்றதே? (இனி என்ன செய்வோமோ?);

என்று, இடைச்சுரத்துப் போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொன்னான் என்க. - -

சொற்பொருள்: 1. எல்லை - பகல். 2. முன்உருபு - முன்னர் உற்றிருந்த அந்த நிலை.அடைய முற்றிலும்.3 பதிமறந்து உறைதல் - ஊரினை மறந்து; தங்குதல்; பிறந்து வளர்ந்த ஊரினையும் மறக்கும் வன்மையுடையோம்; கூடிய அவளுடைய காதலை மறக்கல் ஆற்றோம் என்பது கருத்து. 5. கால்கழி தேக்கிலை - காம்பு கழன்ற தேக்கிலைகள்; அது, காற்று கோடைக்காற்று எனவும்.இலைகள் கோடையால் வாடிய இலைகள் எனவும் காட்டும்.6 பருந்தின் வெறி-பருந்தின் கூட்டம், 8. தாஅய்-தாவிப் பரந்து. 1. வைகு நிலை மதியம் - வைகறை காலத்தே விளங்கும் மதியம்; அது மெல்ல மெல்ல ஒளி குறைதல் போல முகமும் ஒளியற்றதாயிற்று என்க. 12. புதுக்கவின் புதுமையான அழகு; நாளும்புதுமை தோன்றும் முகவசீகரம். 13. திருமுகம் இறைஞ்சுதல் முகம் கவிழ்தல்.16. கால்நிலை செல்லாது - கால்கள் நிற்பதற்கும் வலியற்றவனவாக, 17 நவிலாக் கிளவி எழாத பேச்சு, பேச்சும் எழாத சோகநிலை.18. அறல் - அறல்பட்ட கருமணல்.18. கூந்தலில் மறையினள் - கூந்தல் அவிழ்ந்து தாழ, அது தலை கவிழலால் முகத்தை மறைக்க விளங்கினள்.20.பருவரல் - படரும் துன்பம். 21. விதுப்புறுதல் - விரைந்து சோர்தல், பேதுறல் மயக்கமடைதல்.

விளக்கம்: ‘பருந்திம் வெறி எழுந்து’ என்றது, காட்டினிடத்தே ஆறலைப்போரால் பட்டு வீழ்ந்தவரான மக்களின் பிணநாற்றத்தை அறிந்து, அவர் தசையை உண்ணுதற்கு வேட்டு, வட்டமிட்டுப் பறந்து எழுதல்.இது காட்டின் கடுமையை உணர்த்தும்.

300. விருந்தும் செய்வேர்ம்!

பாடியவர்: உலோச்சனார். திணை: நெய்தல். துறை: பகற்குறி வந்து நீங்கும் தலைமகற்குச் சொல்லியது.

(பகற்குறியிடத்தே வந்து தன் காதலியைக் கூடி இன்புற்றுச் செல்லுகின்றனன் தலைமகன். அவனைக் கண்டு, தோழி தலைமகள் அவனுடன் பிரியாதிருக்கும் நிலையினை வேண்டியவளாயினள் எனக் கூறுவதன் மூலம், விரைந்து இருவரும் மணநெறி புகுதலை வலியுறுத்துகின்றாள்.)