பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/401

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


386 அகநானூறு - மணிமிடை பவளம்

என்பதைக் காட்டும். இவர் செய்யுளாக நாம் காண்பவை, அகத்துள் மூன்றும், குறுந்தொகையுள் மூன்றும், நற்றிணையுள் ஒன்றும் ஆகும். பொருள்வயிற் பிரியும் இளைஞர்களின் நிலைமையினை இவர், ‘நல்லிசை வலித்த நாணுடை மனத்தர் என்று விளக்குவதும், பாண்டியன் காலத்துக் கூடல் நகரின் சிறப்பான ஆரவாரக் களிப்பினைக் கூறுவதும் இப்பாடலுள் காணப்படும் சிறப்பாகும். உம்பற்காட்டு இளங்கண்ணனார் (264)

‘உம்பற்காடு’ என்பது சேரருக்குச் சொந்தமானதொரு நாட்டுப் பகுதியாகும். கண்ணனார் என்ற பெயர் அக்காலத்துப் பெருவழக்காயிருந்த பெயர் என்பதனைக் குமட்டுர்க் கண்ணனார் போன்று சங்கப் புலவர்களாக முப்பது புலவர்களுக்குமேல் வருவது கொண்டு துணியலாம். இந்தப் பாடலுள் ‘காதலர் தந்நிலை அறியார் ஆயினும், தந்நிலை அறிந்தனர் கொல்லோ தாமே?’ என்று, குறித்த காலத்துக் காதலன் வாரானாகத் தலைவி வருத்துவதாக வரும் பகுதி மிகவும் நயமுடையதாகும். மழையில் வானம் மீன் அணிந்தன்ன குழையமல் முசுண்டை வாலிய மலர என்ற உவமையும் மிக்க சுவையுடையதாகும்.

உலோச்சனார் (190, 200, 210, 300)

பெரும்பாலும் நெய்தற்பகுதிப் பாடல்கள் பாடுவதிலே சிறப்புடையவராயிருந்தவர் இவர். சொல்லும், இவர் கடற்பகுதி ஊரினர் எனவும், உமண் வகுப்பார் எனவும் காட்டும். ‘பொறையாற்றுப் பெரியனும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற் கிள்ளியும் இவராற் பாடப்பெற்றோராவர். இவர் பாடியவையாக விளங்கும் செய்யுள்கள், குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, புறநானூறு ஆகிய அனைத்தினுமாக 23 செய்யுட்களாகும். இந்தப் பாடல்களுள் 200 ஆவது பாடலை நக்கீரர் பாடியதெனப் பாடபேதமும் உரைப்பர். நெய்தலுள், (300வது பாடல்) மகளிர் தலைமகனை இரவிலே தங்கிச் செல்க எனச் சொல்லி வற்புறுத்தும் திட்டம் மிகவும் நயமுடையதாகும். அத்துடன் அது மகளிரின் காதலுள்ளத்தின் பாங்கினையும் களவுறவின் ஆர்வத்தையும் நன்கு காட்டுவதாகும். உவர்க் கண்ணுர்ப் புல்லங் கீரனார் (146)

புல்லங் கீரனார் என்ற பெயரால் இவர் கீரர் குலத்தவர் எனலாம். உவர்க் கண்ணுர்’ என்றதனால், இவர் கண்ணுரரினர் எனவும், நெய்தற் பகுதியினைச் சார்ந்தது அவ்வூர் எனவும் கருதலாம். இவர் பாடலாகக் காணப்படுவது இஃது ஒன்றேயாகும். மருதத்திணைச் செய்யுளாக இவராற் செய்யப்