பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/402

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மூலமும் உரையும்
புலியூர்க்கேசிகன் ★ 387
 

பட்ட இச்செய்யுளில், 'மாயப் பரத்தன் வாய்மொழி நம்பி வளிபொரத் துயல்வருந் தளிபொழி மலரிற், கண்பனி அகத்து உறைப்ப, எனத் தலைவி, தலைவன் பரத்தமை கொண்டு பிரியத், தான் வருந்தியிருக்கும் நிலையைக் கூறுவதாகவரும் பகுதி மிகவும் சிறப்பு உடையதாகும்.

உறையூர் மருத்துவன் தாமோதரனார் (133, 257)

இவர், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமா வளவ்னையும், பிட்டங் கொற்றனையும் புறநானூற்றுள் பாடியுள்ளார் (60, 170, 321). உறையூரினர் என்பதும், மருத்துவத் தொழிலோர் என்பதும், திருமால் வழிபாட்டினர் என்பதும் பெயரால் புலனாவனவாம். அதே சோழனைக் கோவூர்க்கிழார், மாடலன் மதுரைக் குமரனார், காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் ஆகியோரும் பாடியுள்ளமையால், இவரும் அவர்கள் காலத்து இருந்தவராகலாம். இந்நூலுள் வரும் பாடல்கள் இரண்டும் பாலைத் திணையைச் சார்ந்தன.‘வில்லெறி பஞ்சியின் வெண்மழை தவழும்' என்ற உவமையால் பஞ்சு கொட்டும் தொழிலையும், 'தலையிலுள்ள பூவின்கண் மொய்க்கும் வண்டினை ஒட்டுதற்கும் ஆற்றாயான நீ காட்டுடே எங்ஙனம் வருகின்றனையோ?' எனத் தலைவன் தன்னுடன் வரும் தலைவியை வியந்ததனையும் காட்டுகின்றனர் இவர்.

உறையூர் முது கூத்தனார் (137)

உறையூர் முதுகூற்றனார், உறையூர் முதுகொற்றனார் என்றும் இவர் பெயர் காணப்படும். அகத்துள் இரண்டும், குறுந்தொகையுள் மூன்றும், நற்றிணையுள் இரண்டும், புறத்துள் ஒன்றும் இவர் பாடியவராகக் காணப்படும் செய்யுட்கள். சோழன் போர்வைகோப் பெருநற்கிள்ளியின் தந்தையாகிய வீரரை வேள்மான் வெளியன் தித்தனைப் (நற் - 58) பாடியிருத்தலினால் அவன் காலத்தவர் என்பர். தித்தனைச் சாத்தந்தையார், ஏணிச்சேரி முடமோசியார் ஆகியோரும் பாடியதால் இவரும் அவர்கள் காலத்தவராகலாம். இப்பாடலுள், உறையூரின்கண் நடைபெற்ற பங்குனி முயக்கம்’ ஆகிய திருநாளையும், திண்தேர்ச் செழியனின் பொதியத்து மூங்கிலையும் பாராட்டிக் கூறியுள்ளனர்.

எயினந்தை மகனார் இளங்கீரனார், (225, 239,289,299)

இவர் வேட்டுவக் குடியினர். இவர் எயினந்தையாரின மகனார் ஆவர். அகம், குறுந்தொகை, நற்றிணை முதலியவற்றுள் இவர் பாடியனவாகப் பதினாறு செய்யுட்கள் காணப்டும். இவர்