பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/405

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


390 அகநானூறு - மணிமிடை பவளம்

கடியலூர் உருத்திரங் கண்ணனார் (167)

இவர், சோழன் கரிகாற் பெருவளத்தான் மீது பட்டினப் பாலை என்னும் ஒப்பற்ற நூலை இயற்றியவர். சங்கத் தொகையுள், பத்துப் பாட்டின் ஒன்பதாவது பாட்டு அதுவாகும். பதினாறு நூறாயிரம் பொன் அதற்காகப் பரிசில் பெற்றனர் இவர் எனக், கலிங்கத்துப் பரணி கூறும். கழாஅத்தலையார், முடத்தாமக் கண்ணியார் காலத்தவராகலாம். மேலும், தொண்டைமான் இளந்திரையன் மீது பத்துப் பாட்டுள் நான்காவதான பெரும்பாணாற்றுப் படையினைச் செய்தவரும் இவரேயாவர். கடியலூர் என்பது இன்றைய திருநெல்வேலி ம்ாவட்டத்துள் அந்நாள் விளங்கிய ஒர் ஊர். உருத்திரன் என்ற சொல்லால் இவர் அந்தணர் மரபினர் என்பர். குறுந் தொகையின் 352 ஆவத பாடலைப் பாடியவரும் இவரேயாவர். இந்நூற் செய்யுளுள் (167) பாலை நிலத்துள் கோடைக் காலத்துப் பாழ்பட்ட ஊரின் நிலையினை மிகவும் உருக்கமாக இவர் வருணித்துள்ளார். கபிலர் (128, 158, 182, 203, 218, 238,248,278, 392)

இவர் வேள்பாரியின் மிகச் சிறந்த நண்பராக விளங்கியவர். பதிற்றுப்பத்துள் ஏழாம் பத்தைப் பாடிச் சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனிடம் பெரும்பரிசில் பெற்றவர். பத்துப்பாட்டிற் குறிஞ்சிப் பாட்டும், கலித்தொகையுள் குறிஞ்சிக் கலியும், ஐங்குறு நூற்றுள் குறிஞ்சி பற்றிய நூறும் இவர் இயற்றியவை. பரணர், இடைக்காடர் ஆகியோர் இவரது உற்ற நண்பர்கள். அகுதை, இருங்கோவேள், ஒரி,சேரமான் மாந்தரஞ் சேரல் இரும்பொறை, நள்ளி, காரி, விச்சிக்கோன், பாரி, பேகன் ஆகிய பலர் இவராற் பாடப் பெற்றவர். இவர் வேறு, தொல்கபிலர் என்பார் வேறு. இவர், பாரி மகளிரின் மணத்திற்காகப் பெரிதும் முயற்சி எடுத்துக்கொண்டு, அது முடிந்ததும், வடக்கிருந்து உயிர்நீத்த பெருஞ் சிறப்பினரும் ஆவர். இவர் பாடல்கள் எல்லாம் பெரிதும் கருத்துச் செறிவும் பொருள் நயமும் உடையன.

கயமனார் (145, 189, 195, 219, 221, 259, 275)

இவர் பாடியன அகத்துள் 12 - ம் குறுந்தொகையும் 4 - ம்

நற்றிணையுள் 6 - ம், புறத்துள் 1 - ம் ஆக, 23 பாடல்களாகும்.

குறுந்தொகை ஒன்பதாவது செய்யுளிலே,

“பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல்

இனமீன் இருங்கழி ஒதம் மல்குதொறும் கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும்,”