பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/415

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
400
அகநானூறு - மணிமிடை பவளம்
 

கட்டிலிலே அவர் உறங்க விசிறி வீசிய பண்பினையும் நினைத்தால், இவனே பெரும் புலமையுடன் திகழ்ந்த பாலை பாடிய பெருங்கடுங்கோ என நாமும் கூறலாம். இந்நூலுள், இவன் பாடியவை ஆறு செய்யுட்கள். அவை அனைத்தும் சுவையுடையனவாகும்.

அறன் கடைப் படாஅ வாழ்க்கையும்; என்றும்
பிறன் கடைச் செலாஅச் செல்வமும்; இரண்டும்

பொருளின் ஆகும்.
(155)

எனப் பொருளினால் அமைவதே வாழ்வு என்ற உண்மையினை இவன் தெளிவுறக் காட்டிச் சொல்லுகின்றான்.

261ஆவது செய்யுளுள், காதலன் தன் காதலியுடன் வழி நடந்த செய்தியைத் தோழிக்குச் சுவைபடச் சொல்லும் நயமோ நினைந்து நினைந்து இன்புறற் பாலது.

இலங்குவளை தெளிர்ப்ப வீசிச், சிலம்பு நகச்
சின்மெல் ஒதுக்கமொடு மென்மெல இயலி, 'நின்
அணிமாண் சிறுபுறம் காண்கம், சிறு நனி
ஏகு என, ஏகல் நாணி, ஒய்யென
மாகொ ணோக்கமொடு மடங்கொளச் சாஅய்
நின்றுதலை இறைஞ்சி யோளே!...

பெண்மையின் சிறந்த பண்பின் விளக்கம் இது எனலாம்.

பேயனார் (234)

முல்லைத் திணையினை மிகவும் வியந்து சிறப்புறப் பாடிய பெருமையுடையவர் இவர். ஐங்குறு நூற்றின் ஐந்தாவது நூறாகிய முல்லைபற்றி செய்யுட்களைச் செய்தவரும் இவரே. அஃதன்றியும் குறுந்தொகையுள் 233, 339, 359, 400ஆவது செய்யுட்களையும், அகநானூற்றின் இந்தச் செய்யுளையும் இவர் பாடியுள்ளனர். குறுந்தொகை 339ஆவது செய்யுளுட் பேயார் எனக் காண்பதுகொண்டு, இவரும் அவரும் வேறானவர் எனக் கொள்வர் டாக்டர் உ.வே.சா. பேய்மகள் இளவெயினி என்பவர் இவருடைய மகளார் போலும் அவர், சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோவைப் பாடியவர். இச் செய்யுளுள், தலைமகன் தேரினை விரைவாகச் செலுத்துமாறு பாகனை ஏவியதை நயமுடன் கூறியுள்ளனர்.

பொதும்பில் கிழான் வெண்கண்ணனார் (130, 192)

இவர் வேளாண் மரபினர். பொதும்பில் என்னும் ஊரினர். இவ்வூர் பாண்டிநாட்டில், மதுரைத் தாலுக்காவில் உள்ளது. இவர் பாடியவை இந்த இரண்டு செய்யுட்களேயாகும். இவற்றுள்