பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/419

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
404
அகநானூறு - மணிமிடை பவளம்
 

மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார் (298)

மதுரையிலே பலசரக்கு வாணிகம் செய்து வந்தவர் இவர். இளந்தேவனார் என்பது பெருந்தேவனாரினும் வேறுபடுத்தக் கூறியதாகும். இவர் பாடியவை அகம் 58, 298, 328, நற்றிணை 41, ஆகிய செய்யுட்களாகும். ‘உன்னைத் தழுவுவதிலும் உன்னை நினைந்திருக்கும். அதுவே இனிது’ என, இவர் (48) கூறுவது நய்னுடையதாகும். இப்பாடலுள்ளும், ‘நீ வந்த தனினும் என் தோழி உவந்தது எனக்கு இனிது’ என்று, தலைமகனிடம் தலைமகள் கூறுவதாக இனிதாகச் சொல்லியுள்ளனர்.

மதுரைப் பாலாசிரியன் நப்பாலனார் (172)

பாலனார் இவர் பெயர். ‘நல்’ என்பது அடைமொழியா யிருக்கலாம். பாலாசிரியன் என்பது இவர் மதுரையின் ஒரு பகுதிக்கண் ஆசிரியத்தொழில் பூண்டிருந்ததனால் அமைந்த தாகும் என்பர். பேராசிரியர், பாலாசிரியர், இளம் பாலாசியர் என்ற மூன்று பகுப்பினுள் இவர் பாலாசிரியர் பகுப்பினைச் சாாந்தவர். சேந்தன் கொற்றனார், நற்றாமனார் ஆகியோரும் பாலாசிரியன் என்ற அடைமொழியுடன் வழங்கி வந்தனர். இச்செய்யுள் ஒன்றே இவர் செய்ததாகக் கிடைத்தது. இதன்கண், ‘இரும்பு வடித்தன்ன கருங்கைக் கானவன்’ என், வேட்டுவனின் ஆற்றலையும் உடற்கட்டையும் இவர் போற்றியுள்ளது சிறப்புடையதாகும்.

மதுரைப் புல்லங் கண்ணனார் (161)

இவர் பாடியவையாகக் கிடைத்ததும் இந்த ஒரே செய்யுள்தான். கண்ணனார் இயற்பெயர் எனவும், புல்லன் தந்தை யார் பெயர் எனவும் கூறுவர். இப்பாடலுள், நல்வரல் இளமுலை நனையப் பல்லிதழ் உண்கண் பரந்தன பனியே என்றதனால், ஒளியற்ற கண்ணுடையார் என்ற கருத்துடன், கண்ணனார் என்பார் பலரிடையும் வேறுபடுத்துக் காட்டுவதற்குப் 'புல்லங் கண்ணனார்' எனப் பெற்றனர் எனவும் கருதலாம்.

மதுரைப் பேராலவாயார் (296)

இவர் பாடியவை நற்றிணை, புறநானூறு, அகநானூறு ஆகியவற்றுள் இரண்டிரண்டு பாடல்களாக ஆறு செய்யுட்களாகும். ஒல்லையூர் தத்த பூதப்பாண்டியனின் தேவியான பெருங்கோப்பெண்டு தீப்பாய்ந்த காலத்திலே, இவர் பாடியதாகக் காணப்படும் புறநானூற்றுப் பாடல் மிகவும் உருக்கந் தருவதாகும். மற்றும், வெற்றி பெற்று வரும் அரசனையும் படைவீரரையும் வரவேற்குமாறு மக்களைத் தூண்டும் இவரது மற்றொரு புறப்பாட்டும் சுவை மிகுந்ததாகும். இந்தப் பாடலுள்