பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மூலமும் உரையும் புலியூர்க்கேசிகன் 27

இதணை இலை அருகு நெறித்தன்ன வண்டுபடுபு இருளிய கூந்தற் கோதை இவளினும், நமக்கு ஈதல் சிறந்தன்று என் நெஞ்சே, கானம் நம்மொடு வருக என்னுதியாயின், வாரேன்; நின் வினை வாய்க்க என்று கூட்டிப் பொருள் காண்க. -

மேற்கோள்: “ஆபெயர்த்துத் தருதலும் என்னும் ‘வெறியறி சிறப்பின் என்னும் புறத்திணையியற் சூத்திரப் பகுதிக்கு, இப் பாட்டின்ை உதாரணமாகக் காட்டி, இதனுள் மறவர் நாளாவுய்த்த என, வேந்துறு தொழிலல்லாத வெட்சித்

திணையும், கரந்தைக்கண்ணே கொள்க என்றும்;

‘பெயரும் பீடும் எழுதி அதர்தொறும் பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல் என, அகத்திற்கும் வருதலின், பொது வியலாயிற்று என்றும்;

‘நோயும் இன்பமும்’ என்னும் பொருளியற் சூத்திரத்து வருகவென்னுதி யாயின், வாரேன், நெஞ்சம்! வாய்க்க நின் வினையே! என்பது, மறுத்துரைப்பது போலத் தறுகண்மை பற்றிப் பெருமிதங் கூறிற்று என்னும் நச்சினார்க்கினியர் கூறுவர்.

பாடபேதங்கள்: 1 mகைப். 6. வீவாய் அம்பின். 12. படுக்கும். 15. வோர நெஞ்சம்.

132. நின்னுடன் கொண்டு போய்விடுக!

பாடியவர்: தாயங் கண்ணனார். திணை: குறிஞ்சி. துறை: தோழி தலைமகளை இடத்து உய்த்துவந்து தலைமகனை எதிர்ப்பட்டு நின்று வரைவுகடாயது.

(குறித்த இடத்திலே தலைமகளைக் கொண்டு சேர்த்து விட்டுத், தலைமகன் அவளை விரைந்து மணந்துகொள்ள வேண்டியதை வற்புறுத்துகிறாள் தோழி)

ஏனலும் இறங்குகுரல் இறுத்தன; நோய்மலிந்து ஆய்கவின் தொலைந்த இவள் நுதலும்; நோக்கி ஏதில மொழியும் இவ்வூரும்; ஆகலின், களிற்றுமுகந் திறந்த கவுளுடைப் பகழி, வால்நிணப் புகவின், கானவர் தங்கை 5 அம்பணை மென்தோள் ஆயஇதழ் மழைக்கண்

ஒல்கியற் கொடிச்சியை நல்கினை ஆயின், கொண்டனை சென்மோ நுண்பூண் மார்ப! தளிதலைத் தலைஇய சாரல் நளிசுனைக் கூம்புமுகை அவிழ்த்த குறுஞ்சிறைப் பறவை 10