பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/420

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மூலமும் உரையும்
புலியூர்க்கேசிகன் * 405
 

இவர், பேரிசைக் கொற்கைப் பொருநன் வென்வேற் கடும் பகட்டு யானை நெடுந்தேர்ச் செழியன், எனப் பாண்டியனைக் குறித்துள்ளதும் காணலாம்.

மதுரை மருதங்கிழார் மகனார் பெருங் கண்ணனார் (247)

அகநானூற்று 247, 347 செய்யுட்களையும், நற்றிணை 338 ஆவது செய்யுளையும் செய்தவர் இவர். பெருங் கண்ணனார் என்ற மற்றொருவரினும் வேறுபடுத்த இவர் மதுரை மருதங்கிழார் மகனார் எனக் குறிக்கப் பெற்றனர். இவருடைய உடன் பிறந்தாராக இளம் போத்தன் என்ற ஒருவரும். இருந்திருக்கின்றனர். அவர் குறுந்தொகை 332ஆவது செய்யுளைப் பாடியவர்; மற்றொருவர் சோகுத்தனார் என்பவர். இவர் வேளாளர் மரபினர். இப்பாடலுள், ‘மண்ணாமுத்தம் ஒழுக்கிய வனமுலை நன்மா ணாகம்' எனப் பிரிவுத் துயரினாலே வாடியிருக்கும் தலைவியை இவர் நயமுறக் கூறுகின்றார்.

மதுரை மருதன் இளநாகனார் (121, 131, 184, 193,206, 220, 245, 255, 269,283, 297)

இவர், பாடினவாகச் சங்கத் தொகை நூற்களுள் காணப்பெறும் செய்யுட்கள் 37 ஆகும். இவரும் மருதக்கலியினைச் செய்தவரும் வேறானவர் என டாக்டர் உவேசா அவர்கள் கூறுவர். ஒருவரே எனக் கொள்வாரும் உளர். இறையனார் அகப்பொருளுக்கு உரைகண்ட நாற்பத்தொன் பதின்மருள் இவரும் ஒருவர் என்பதனாலும், நக்கீரர் உரைக்கு அடுத்தபடி சிறப்புடையதாக அது திகழ்ந்தது என்பதனாலும், இவர் அவர் காலத்திலிருந்தவர் எனலாம். பிட்டன், கழுவுள் பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன், பாண்டியன், கூட காரத்துத் துஞ்சிய மாறன் வழுதி முதலியோரைக் பாடியவர் இவர்.

‘பெயரும் பீடும் எழுதி அதர்தொறும்
பீலிசூட்டிய பிறங்குநிலை நடுகல்
வேலூன்று பலகை வேற்றுமுனை கடுக்கும்’
(131)

என நடுகற்கள் நின்ற நிலையினையும்,

‘கடவுட் கற்பொடு குடிக்கு விளக்காகிய
புதல்வற் பயந்த புகழ்மிகு சிறப்பின்
நன்னராட்டி’ -
(184)

என, இல்லத் தலைவியின் சிறப்பினையும்,