பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/421

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


406 அகநானூறு - மணிமிடை பவளம்

“வானம் வேண்டா வில்லேர் உழவர் (193) என, ஆறலை கள்வர் இயல்பினையும்,

‘மயிர்க்கவின் கொண்ட மாத்தோல் இரும்புற்ம் சிறுதொழில் மகாஅர் ஏறிச் சேணோர்க்குத் துறுகல் மந்தியிற் றோன்றும்’ (206)

எனச் சிறுவர்களது தன்மையினையும், செல்லூரிலே பரசுராமன் யாகம் செய்த சிறப்பினையும், வேளிரின் வீரை முன்றுறை, கோசரின் செல்லூர், ஊனுர், வாணனின் சிறுகுடி என்ற ஊர்களையும், நடுகற்களில் எழுதுவதைக் ‘குயிலெழுத்து’ என்று சொல்லும் வழக்கினையும் இந்நூற் பாடல்களுள் காணலாம்.

மருதம் பாடிய இளங்கடுங்கோ (176)

இவர் சேரர் மரபினர். பாலைபாடிய இளங்கடுங்கோவின் தம்பியாயிருக்கலாம் எனக் கருதுவர். மருதத்தைச் சிறப்பித்துப் பாடியவர். நற்றிணையுள் ஒன்றும், அகத்துள் இரண்டுமாக மூன்று பாடல்கள் இவர் பாடியவாகக் கிடைத்தவை, அகுதை யின் தந்தையரான சோழர்கள் பருவூர்ப் போர்க்களத்திலே செய்த போர் இவரால் குறிக்கப் பெற்றிருக்கின்றது. இவரே இளஞ்சேரல் இரும்பொறை எனக் கூறுபவரும் உளர். ‘கழுநிவந்தன்ன கொழுமுகை, என்றலால் உவமைநயம் பெறப்படும். பரத்தை உறவிலே தலைவன் ஈடுபட்டான் என வாடிய தலைவியானவள்,

“....நீன் காதலி, எம்போல் புல்லுளைக் குடுமிப் புதல்வற் பயந்து நெல்லுடை நெடுநகர் நின்னின் றுறைய என்ன கடத்தளோ?

என்று சொல்வதாக இவர் கூறுவது, சொல்லாட்சியின் நுண்மையைக் காட்டுவதாகும்.

மாமூலனார் (127, 187, 197, 201, 211, 233,251, 265,281, 295) -

இவர் அந்தணர் மரபினர் எனவும், முக்காலமும் அறியும் திறன்பெற்ற யோகசித்தியை உடையவர் எனவும் கூறப் பெறுபவர். இவராற் பாடப்பெற்றோர் பலராவர். அகநானூற்றுள் 27 பாடல்களும், குறுந்தொகை 11 ஆவது பாடலும் நற்றிணையுள் இரண்டும் இவர் பாடியவையாகக் காணப்படுபவை. இவர் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், உதியஞ் சேரலாதன் ஆகியோர் காலத்தவர். இவர் பாடல்களுள் அரசியற் ஆகியோர் காலத்தவர். இவர் பாடல்களுள் அரசியற்