பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/422

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மூலமும் உரையும் புலியூர்க்கேசிகன் 407

செய்திகள் பலவும் அமைந்துவரக் காணலாம். திருமந்திரம் பாடியவர், வேறு திருமூலர் ஆவர். முள்ளியூர்ப் பூதியார் (173)

இவர் பாடியதாகக் கிடைத்தது இந்த ஒரே செய்யுளே யாகும். இது பாலைத்திணைப் பாடல் மலையமானுக்கு உரியதான முள்ளுர்க் கானத்தை இலக்கியங்களிலே காண்கிறோம். இம் முள்ளியூர் அந்தப் பகுதியில் உள்ளது போலும்! பூதியார் என்ற பெயரமைப்பினால் இவரோற் பெண்பாற் புலவர் எனவும் கருதலாம். ‘அறந்தலைப் பிரியாது ஒழுகலும், சிறந்த கேளிர் கேடுபல ஊன்றலும், நாளும் வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல்லெனச் செய்வினை புரிந்த நெஞ்சினர் எனப் பொருள்வயிற் பிரியும் காதலரைப் பற்றிக் கூறும் இல்வாழ்வின் நெறிகுறித்த தன்மையும், நன்னன்’ என்பவனின் சிறப்பைக் கூறுவதும் இனிமையுடையதாகும். மோசிக் கரையனார் (260)

“மோசி என்ற அடையுடன் மோசிக் கண்ணத்தனார் மோசி கீரனார், மோசி கொற்றன், மோசிக் கரையனார், மோசி சாத்தனார் என்ற புலவர் பெயர்கள் காணப்படுகின்றன. ஆகவே, இவர்கள் அனைவரும் மோசி என்ற பெயருடன் தொடர்பு உடையவர்கள் எனலாம். உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்பார் புகழ்பெற்ற புலவர்களுள் ஒருவர். அவருடைய மக்களாக இவர்கள் அனைவரையும் கருதுவர். இது நெய்தல் திணைச் செய்யுள், கழுது வழங்கு அரைநாள் என நள்ளிரவிலே பேய்கள் நடமாடுவது உண்டு என்ற ஒரு பழஞ் செய்தியை இவர் பாடலில் குறிப்பிடுகிறார். * * -

வடமவண்ணக்கண் பேரிசாத்தனார். (214,242, 268)

இவர் பெயர் பேரிசாத்தனார் எனவும் வழங்கும். கடலலையின் ஒலிமுழக்கினை நற்றிணை 377 ஆவது பாடலுள் பேரிகையின் ஒலிக்கு உவமித்த காரணத்தால் இப்பெயர் பெற்றனர் என்பர். பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் என்பவனை இவர் வாழ்த்தும் பகுதி, அந்தக் காலத்து வாழ்த்தியல் மரபினை விளக்குவதாகும். நீயும் நின் புதல்வரும் அவர் பெறும் புதல்வரும் நீடு வாழ்க!’ என்பதே அது. ‘காமம் வந்த காதல் உண்டெனின்? எனக் காதலின் ஒரு சிறந்த கவர்ச்சி நிலையினையும் (அகம் 268) காணலாம்.

விற்றுற்று மூதெயினனார் (136, 288)

இவர் வேடர் மரபினர். விற்றுாற்று என்னும் ஊரினர். ‘மூதெயினன்’ என்ற சொல்லால் இவரை வேடர் மரபினர் என்று