பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/423

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


408 அகநானூறு - மணிமிடை பவளம்

சொல்வதே பொருந்தும். அகம் 136 ஆவது பாடலுள் பண்டைய திருமண வைபவத்தை இவர் சுவைபடச் சொல்லிச் செல்வது மிகவும் சிறப்பு உடையதாகும். மாங்காட்டு மலைதெய்வம் உடையது என்ற செய்தியினையும் இவரது (அகம் 288) பாடலுள் காணலாம்.

விரை வெளியன் தித்தனார் (188)

தித்தன் என்பவனைப் பரணர் புறம் 35இல் பாடியுள்ளனர். அவன் உறந்தைக்கு உரியவன். இவர் வீரை என்னும் நகருக்கு உரியவரான தித்தனார். வீரை வெண்மான் வெளியன் தித்தன் எனவும் இவர் பெயர் வழங்கப்படுவது உண்டு. அதனை, முது கூத்தனார் பாடிய நற்றிணை 58ஆவது பாடலுள் காணலாம். இவர் குறுநிலத் தலைவர் என்பதை, “அறநெறி பிழையாத் திறனறி மன்னர் என்பதால் அறியலாம். வெண் கண்ணனார் (130)

பொதும்பில் கிழான் வெண்கண்ணனார் பார்க்கவும். இப்பாடலுள் கொற்கை முன்றுறையிலேயுள்ள நெய்தற் போதினை இவர் உவமைக்கு எடுத்தாண்டு உள்ளனர். வேம்பற்றுர்க் குமரனார் (157)

வேம்பற்றுார் பாண்டி நாட்டுள் ஒர் ஊர். இவரது இயற்பெயர் குமரனார். வேம்பற்றுார்க் கண்ணன் கூத்தன் என்பார் ஒருவரும் இவ்வூரவராக உள்ளனர். இத்துடன் புறநானூற்று 317 ஆவது பாடலும் இவர் பாடியதாகும். ‘முனைபுலம் பெயர்த்த புல்லென் மன்றத்துப் பெயலுற நெகிழ்ந்து வெயிலுறச் சாஅய் வினையழி பாவை’ எனப் பிரிந்துறை மகளிர்க்கு இவர் கூறும் உவமை மிகவும் நயமுடையதாம்.

ஆசிரியர் பெயர் காணாப் பாடல் (165)