பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/425

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


410 அகநானூறு - மணிமிடை பவளம்

பிற்சேர்க்கை - 3

மணிமிடை பவளத்துள் பாடப்பெற்றோர் வரலாறுகள் (மணிமிடை பவளத்துச் செய்யுட்களுள் வரும் பல

தலைவர்கள் அரசர்களைப் பற்றிய குறிப்புக்கள் அகர வரிசையில் எண் - செய்யுள் எண்)

அகுதை (208)

இவன் கூடல் நகரிலே இருந்து அரசோச்சியவொரு குறு நிலத் தலைவன். கபிலர். கல்லாடனார், பரணர் போன்ற புலவர் பெருமக்களின் பாராட்டுக்களைப் பெற்றவன். வெளியன் வேண்மான் ஆஅய் எயினன் பாழிப்பரந்தலையிலே மிஞலியோடு போரிட்டுப்புண்பட்டு வீழவும், நன்னன் படுகளஞ் சென்று அருளாது ஒளிந்து கொள்ளவும், வேள் மகளிர் பூசலைக் களைந்து உதவியவன் இவன் என்பது இந்தப் பாட்டிலே வரும் செய்தியாகும். பின்னர் இவனுக்கு ஆபத்து நேர்ந்த காலத்திலே, இவனை அரண்மிகுந்த இடத்திலே வைத்துக் காத்து நின்றவர்கள் கோசர்களாவர். இவனது கூடல் நகரம் மேற்காநாட்டுக் கூடல் எனப்படும் ‘கூடலூர் நகரம்.

அதிகன் (142, 162)

வெளியன் வேண்மான் ஆய் எயினன் என்பவனே இந்த அதிகன் எனப்படுபவனுமாவன். இந்த இரண்டு பாடல்களையும் பாடியவர் பரணர். ‘வாய் மொழி மிஞ்லி புள்ளிற்கு ஏமமாகிய பெரும் பெய்யர் அதிகற் கொன்று வந்து ஒள்வாள் அமலை ஆடியதாகவும் (142); நல்லிசை தரூஉம் இரவலர்க்கு உள்ளிய நகை பிழைப்பு அறியாக் கழல்தொடி அதிகன் எனவும் (162) கூறியிருப்பதனை இந்நூலுட் காண்கிறோம். மிஞலியோடு போரிட்டு வீழ்ந்தவன் வெளியன் வேண்மான் ஆய் எயினன் எனவும், அவன் வீழ்ந்தபோது ஒண் கதிர்தெறா அமைப் புள்ளொருங்கு சிறகரின் கோலி நிழல் செய்தன எனவும், பரணரே (208) உரைப்பதனால், இவனே அவன் எனலாம். தகடுரை ஆண்டிருந்தவனாகிய அதிகமான் நெடுமான் அஞ்சியும், பாண்டியர் படைத்தலைவனாகப் பணியாற்றியவனாகக் கொங்கரோடு நடந்த வாகைப் பறந்தலைப் போரிலே பட்ட