பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/434

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மூலமும் உரையும் புலியூர்க்கேசிகன் 419

கோதை (263)

கருவூர்க் கண்ணாம்பாளனார் என்னும் புலவர் இப்பாடலுள்,'ஒளிறுவேல் கோதை ஒம்பிக் காக்கும் வஞ்சி’ என உரைக்கின்றனர். இவன், சேரர் படைத்தலைவனான வில்லவன் கோதையோ அன்றிச் சேரமான் கோக் கோதை மார்பன் என்பவனோ என்றெல்லாம் தெளிவாக அறிதற்கு இயலவில்லை. ஆனால், சேரமான் கோக்கோதை மார்பன் . தொண்டி நகர்க்கு இறைவனாக விளங்கினவன் என்பதையும், அவ்வூரவராகிய பொய்கையார் என்னும் பெரும்புலவர், t அவனைப் புகழ்ந்து பாடினமையும் புறம் 48, 49 - ஆம் செய்யுட்களாற் காணலாம். குறுநிலத் தலைவர்கள் முடியுடை வேந்தர்களின் படைத் தளபதிகளாகப் பணியாற்றி இருத்தலும் கூடுமாதலின், அவ்வாறே, தொண்டிக்கு இறைவனாகிய இவன், சேரர் படைத் தலைவனாகவும் திகழ்ந்தனன் எனவும் கருதலாம்.

செழியன் (137, 149, 175, 209, 296)

உறையூர் முதுகூத்தனார் என்பவர் தோளா முத்தின் தெண்கடல் பொருநன் திண்தேர்ச் செழியன் என, 137ஆவது செய்யுளில் குறிப்பிடுகின்றார். எருக்காட்டுர்தாயங் கண்ணனார், ‘நெடுநல் யானை அடுபோர்ச் செழியன், வளங்கெழு முசிறி ஆர்பெழ வளைஇ அருஞ்சமம் கடந்து படிமம் வவ்விய’ செய்தியை 149ஆவது செய்யுளிற் கூறுகின்றனர். இதுவே, சேரர் அமைத்த கொல்லிப்பாவை என்னும் பொற்பாவை போலும். கால் இயல் நெடுந்தேர்க் கைவண் செழியன் ஆலங்கானத்து அமர்கடந்து என, ஆலங்கானத்து வெற்றிக்குரிய தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் பெயரினைச் செழியன் என்றே ஆலம்பேரிச் சாத்தனார் என்பவர் இந்நூலின் 165ஆவது செய்யுளில் கூறுவர். 209ஆவது செய்யுளிற் கல்லாடனாரும், “எழுவுறழ் திணிதோள் இயல் தேர்ச்செழியன் சேரா எழுவர் அடிப்படக் கடந்த ஆலங்கானத்து’ என நெடுஞ்செழியனின் வெற்றியையே குறிக்கின்றனர், பேரிசைக் கொற்கையம் பொருநன் வென்வேல் கடும்பகட்டு யானை நெடுந்தேர்ச் செழியன்’ எனக் கூறுகிறார் மதுரைப் பேரால வாயார், தம் 296 - ஆவது செய்யுளுள், ஆகவே, இவை யனைத்துமே, பெரும்புகழினனாகிய தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனையே குறிப்பன ஆகலாம்.

சேரலாதன் (127)

கடலிடையே இருந்த பகைவரை முற்றி அவருடை கடம்பினை அறுத்த செய்தியையும், இமயத்து முன்னோர்