பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/436

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மூலமும் உரையும் புலியூர்க்கேசிகன் k 421

திதியன் (126, 145, 196,262)

அன்னி மிஞலியின் துயர் தீர்த்தான் ஒரு திதியன். அவன் அழுந்துார் வேளிர்குலத் தலைவன். 126 - ஆவது செய்யுள் இவனோடு அன்னி என்பான் பொருதுபட்ட நிகழ்ச்சியைக் கூறுகிறது. இதனைப் பாடியவர் நக்கீரர். 145ஆவது செய்யுளில் கயமனாரும் இந்தப் போரினையே குறிக்கின்றனர். 196 - ஆவது செய்யுளில் பரணர், அழுந்துர்த். திதியன்’ என்பான் அன்னி மிஞரிலிக்காகக் கோசர்களைக் கொன்ற செய்தியைக் கூறுகின்றனர். 362 ஆவது செய்யுளிலும் பரணர் இதே செய்தியைக் கூறுகின்றனர். இவன் வேறு; பொதியிற் செல்வனாகிய திதியன் என்பான் வேறு. -

நந்தன் (251, 265)

மஹா பத்ம நந்தன் அக்காலத்தில் வடநாட்டுள் பேரரசனாகத் திகழ்ந்தவன். இவனுடைய செல்வச் செழுமை பற்றியே பேரெண்ணான ‘மஹாபத்ம’ என்ற அடைமொழி யுடன் இவன் வழங்கப்படுவானாயினான். இவனுடைய செல்வச் செழுமையை இப்பாடலுள் (251) மாமூலனார் குறிப்பிடு கின்றனர். 265 - ஆவது பாடலுள்ளும் நந்தர்கள் பாடலியிற் சேர்த்து வைத்த பெருஞ் செல்வமெல்லாம் கங்கையடியிலே சென்று மறைந்த செய்தியை அவரே கூறுகின்றனர்.

நள்ளி (152,238)

இவனே கண்டீரக்கோப் பெருநள்ளி என்று போற்றப் பெறும் வள்ளலாவான். ‘வல்வில் இளையர் பெருமகன் நள்ளி எனப் பரணர் இவனை 152 - ஆவது செய்யுளில் குறிப்பிடுகிறார். கபிலர், ‘இழையணி நெடுந்தேர் களிறோடு என்றும், மழை சுரந்தன்ன ஈகைவண்மகிழ்க், கழல் தொடிக் தடக்கைக் கலிவான் நள்ளி என இவனை 258 ஆவது செய்யுளிற் போற்றுகின்றனர்.

நன்னன்-1 (142, 152, 173, 199, 208, 258)

நன்னன் என்ற பெயருடையார் மூவர் என்பர் ஆய்வாளர்கள். அவர்கள், கடம்பின் பெருவாயில் நன்னன், பல்குன்றக் கோட்டத்துச் செங்கண் மாத்து வேள் நன்னன், நன்னன் உதியன் என்றும் சேரர் படைத் தலைவன் ஆகியோராவர். அவருள் இந்தப் பாடல்களுக்கு உரியவன் பல்குன்றக் கோட்டத்து நன்னனாவான். Dமிலியோடு பகை கொண்டு அவன் படையொடும் வரத் துணைக்கு வந்த ஆய் எயினனைத் தனியே அழியவிட்டு ஒளிந்திருந்தவன் இவனே, பெண் கொலை புரிந்த நன்னன் என்றபழிக்கும் உரியவன்; வேளிர் குலத்தவன்; பாழி, பாரம், பிரம்பு என்ற மலைகளுக்கு உரியவ்ன்.