பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/437

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


422 அகநானூறு--மணிமிடை பவளம்

பகம்பூட்பாண்டியன் (162,231, 153)

இப் பெயருடன் ஒருவனைப் பரணர் (162) மதுரை ஈழத்துப் பூதன் தேவனார் (231), நக்கீரர் (258) ஆகியோர் கூறுகின்றனர். நக்கீரரின் பாடலுள் மட்டும், இவன் கொங்கர்களை வெருட்டி, அவர்களது நாட்டைப் பாண்டிய நாட்டுடன் சேர்த்த செய்தி கூறப்பெற்றிருக்கின்றது.

பண்ணன் (177, 204)

காவிரிக்கு வடபாலிருந்த இவனுடைய நாட்டின் வளத்தினைச் செயலூர் இளம்பொன் சாத்தன் கொற்றனார் இப்பாடலுட் கூறுகின்றனர். சிறுகுடிகிழான் பண்ணன் என்பவனும் இவனே யாவன். அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார், மாற்றுார் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார் ஆகியோர் இவனைப் பாடியுள்ளனர்.

பழையன் - 1. (251)

இவனே மோகூர்ப் பழையன் என்று போற்றப்பட்டவன். பாண்டியர், தளபதி ; பழையன் மாறன் எனவும் பெயர்; கோசர்கள் வடுகர் துணையோடு வந்து தாக்க, அவருக்கு அஞ்சாது எதிர்த்து அவரை அழித்து வெற்றிபெற்றவன் இவன். இப்பாடல் இவனுடைய மோகூர் மோரியர்க்குப் பணியாது நின்ற நிலையினை விளக்குவது, இதனைப் பாடியவர் மாமூலனார்.

பழையன் -2 (196)

இவன் சோழர் படைத் தலைவருள் ஒருவன். காவிரிக் கரையிலேயுள்ள போஒர் இவனது ஊர் ஆகும். கழுமலப் போரிலே சோழர் படைத் தளபதிகளுள் இவனும் ஒருவனாயிருந்தவன். இவனைப் பாடியவர் பரணர். நன்னன், ஏற்றை, அத்தி, கங்கன், கட்டி, புன்றுறை ஆகிய சேரர் படைத்தலைவரை அழித்து இறுதியிற் களத்திலே வீழ்ந்தவன் இவன். பாணன் (226)

இவன் கட்டியோடுங்கூடி, உறந்தைத் தித்தன் வெளியனோடு போரிடச் சென்று, அங்கே அவனுடைய நாளவையின் தெண்கிணையின் ஒலியினைக் கேட்டு அஞ்சி ஒடிப் போனவன். இந்தச் செய்தியைப் பரணர் இந்தப் பாடலுள் குறித்துள்ளனர்.