பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மூலமும் உரையும் புலியூர்க்கேசிகன் 29

அவிழ்த்த தலைமகன், அவள் நுகர்ந்து பாங்கற் கூட்டமும் பின்னர்த் தோழியிற் கூட்டமும் பெற்றுப், பின்னரும் இரவுக்குறி பகற்குறிகளால் அடைதற்கரிய கூட்டம் பெறச் சிந்தியா நின்றான்; அவ்வெண்ணத்தை விட்டு வரைவொடுபுகுக எனத் தலை மகளைத் தோழி வரைவுகடாயினாள் என்று கொள்க.

மேற்கோள்: “ஆயர் வேட்டுவர் என்னும் பொருளியற் சூத்திரவுரையில், “ஆயர் வேட்டுவர் என்னும் இருபெயரான் அன்றி ஒன்றென முடித்தலாற் கொள்ளப்படும் தலைவரும் தலைவியரும் உளர் என்று உரைத்து, ‘வாணிணப் புகவிற் கானவர் தங்கை’ என வருவனவும் காண்க என்பர் நச்சினார்க்கினியர்.

பாடபேதங்கள்: 6 ஆயிழை மழைக்கண் 9. துளிதலைக் கலைஇய 1. விரியினர் உதிரக் காந்தள்.

133. ஒன்று வினவினர்!

பாடியவர்: உறையூர் மருத்துவன் தாமோதரனார். திணை: பாலை. துறை: ‘பிரிவிடை, ஆற்றாளாயினாள் எனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் ஆற்றுவல் என்பதுபடச் சொல்லியது. சிறப்பு: மிளைநாடு பற்றிய செய்தி.

(தலைவன் பிரிந்த காலத்திலே தலைவியின் வாட்டத்தைக் கண்டு, ‘இவள் எப்படிப் பொறுப்பாளோ? என்று கலங்கினாள் தோழி. அவளுக்குத் தன் தலைவனின் காதல் மிகுதியைக் கூறித், ‘தான் ஆற்றியிருப்பேன்’ என்பது தோன்றச் சொல்லுகிறாள் தலைவி) -

“குன்றி அன்ன கண்ண, குருஉமயிர்ப், புன்தாள், வெள்ளெலி மோவாய் ஏற்றை செம்பரல் முரம்பில் சிதர்ந்தபூழி, நல்நாள் வேங்கைவி நன்களம் வரிப்பக், கார்தலை மணந்த பைம்புதற் புறவின், 5 வில்எறி பஞ்சியின் வெண்மழை தவழும் கொல்லை. இதைய குறும்பொறை மருங்கில், களிபரந் தன்ன காயாஞ் செம்மலொடு எரிபரந் தன்ன இலமலர் விரைஇப், பூங்கலுழ் சுமந்த தீம்புனற் கான்யாற்று 10 வான்கொள் தூவல் வளிதர உண்கும்; எம்மொடு வருதல் வல்லையோ மற்று? எனக் கொன்ஒன்று வினவினர் மன்னே - தோழி!