பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மூலமும் உரையும் ---- u # 37

தெள்ளொளி - தெளிந்த ஒளி, 5. சகடம் - உரோகிணி, வானூர் மதியம் சகடணைய’ என்பது சிலப்பதிகாரம். 5. கடி நகர் -

மணவீடு, 7. பரூஉப் பணை - பெரிய முரசம், 8. மகளிர் - மங்கல மகளிர்.9.பூக்கண் - கூரிய கண்.1. பழங்கன்று முதுகன்று. பயம்பு அமல் - குழியிலே நெருங்கி வளர்த்த 12. தழங்கு குரல் - ஒலிக்கின்ற குரல் 13. மண்ணுமணி - கழுவிய நீலமணி. மாஇதழ் - கரிய இதழ். பாவை - பாவை போலும் கிழங்கு 15. மேவர விருப்பம் வர, துவன்றி - ஆற்றி 19, உவர் - வெறுப்பு. அடுவி அடுப்பவள்; சேர்பவள், 20. முருங்கா - புதுத்தன்மை கெடாத: 21. புழுக்கு - புழுக்கம். 22 சிறுவரை - சிறுபொழுது. 24. இமைப்ப - ஒளிவிட 25. மறை திறன் - மறைக்குந் திறன். 27. பகை பரூஉ ஆம்பல் - இதழ் பருத்த பெரிய ஆம்பல். குரூஉத்தொடை - நிறமழகிய மாலை. 29. இரும்பல் கூந்தல் - பெரிய பலவாகிய கூந்தல்.

விளக்கம்: சோற்றாற் புரையோரைப் பேணித், திங்கட் சகடம் மண்டிய கூட்டத்து, நகர்ப்புனைந்து, கடவுட்பேணி, முழவொடு பணை இமிழ, மகளிர் மறைய, தமர் வாகையிலை யையும் அறுகின் முகையையும் சேர்த்துக் கட்டிய வெண் ணுரலைச் சூட்டி, உடையாற் பொலிவித்து, மணப்பந்தலில் துவன்றி, நமக்கு ஆற்றி ஈத்த தலைநாள் இரவின் கண், கலிங்கம் வளைஇப் புழுக்குற்ற நின் வியரை வளியானது ஆற்றுமாறு திறக்கவென, யாம் போர்வையைக் கவர்தலினால், உரு ஒளிவிட, எம் உடம்படுவி, மறைதிறன் அறியாளாகி, ஒய்யென நாணினளாய்க், கூந்தலிருளில் மறை ஒளித்துப் பேணி, இறைஞ்சியோளா யிருந்தாள் என்று கொள்க.

மேற்கோள்: களவின் வழி வந்த கற்பும் கோடற்கு உதாரணமாக நச்சினார்க்கினியர் இப்பாட்டினைப் ‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர், ஐயர் யாத்தனர் கரணமென்ப” என்ற கற்பியற் சூத்திர உரையில் காட்டுவர். -

‘பெரும் புழுக்குற்றநின். திறவென என்பது, ‘பொறிநுதல் வியர்த்தல்’ என்னும் மெய்ப்பாடாகும் என்றும், இம் மெய்ப்பாடு தலைமகற்கு உரித்தன்று, உட்கும் நானும் அவுற்கு இன்மையின் என்றும், பேராசிரியர், புகுமுகம் புரிதல் என்னும் மெய்ப்பாட்டியற் சூத்திரவுரையிற் கூறுவர்.

பாடபேதங்கள்: 1. புழுக்கி நெய்க்கனி, 5. சகடம் வேண்டிய

9.விருப்புற்று.1.பழங்கன்று கறிக்கும்.15.தோன்றி.18.கீந்த.2.நுதற் குறுவியர். 29. விருண்மழை. -