பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மூலமும் உரையும் புலியூர்க்கேசிகன் 39

இலைகளும் நெருங்கிப் பூத்துத் தளிர்த்த மரங்கள் அடர்ந்த சிறு காட்டின் நடுவேயுள்ள தீயில்லாத அடுப்பினையுடைய திருவரங்கத்தைப் போல, நினக்கு நுதல் மிகப் பாழடைந்தது;

துளையிடாத முத்து விளையும் குளிர்ந்த கடலைத் தனக்கு உரித்தாகவுடைய வீரனாகிய, திண்ணிய தேரினையுடைய செழியனது, பொதியம் என்னும் மலைப்பக்கத்திலே வளர்ந்த, நல்ல அழகுடைய நெடிய மூங்கிலை ஒக்கும் தோளும், பண்டை அழகு கெட்டன; .

அதற்கு நான் நோவா நின்றேன்!

என்; தலைமகன் பிரியுமென்று கருதி வேறுபட்ட தலை மகட்குத் தோழி சொன்னாள் என்க.

சொற்பொருள்: 1. ஆறு - பாலை வழி வம்பலர் - புதியர். 6. இன்கடுங்கள் - கடுப்பு இனிய கள். 8. முருகு - தேன். 9. பங்குனி முயக்கம் - பங்குனி உத்திரத் திருநாள்; இது உறையூரிற் சிறப்பாக நிகழ்ந்து வந்துது என்க. 10, இறும்பு - குறுங்காடு. 1. அரங்கம் திருவரங்கம்.14 செழியனின் பொருப்பு என்றது, பொதியத்தை

விளக்கம் : பங்குனித் திங்களில் பெளர்ணமியோடு உத்திரநாள் கூடிய சுபதினமாதலால், அதனைப் பங்குனி முயக்கம் என்றார். முயக்கம் - கூட்டம். இந்நாளிலும் இவ்விழாத் தென்பாண்டிப் பகுதிகளில் சாத்தனார் கோயில் வழிபாடும், உண்டாட்டுமாக நிகழ்ந்து வருதலைக் காணலாம். இறையனார் களவியல் உரையுள், ஊர்கொண்ட பெருவிழா நாட்களாக மதுரை ஆவணி அவிட்டமும், உறையூர்ப் பங்குனி உத்திரமும், கருவூர் வெள்ளி விழாவும் கூறப்படுகின்றன. •

138. கூடினராதல் நல்லதோ?

பாடியவர்: எழுஉப்பன்றி நாகன் குமரனார். திணை: குறிஞ்சி. துறை: தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள் சொல்லியது. சிறப்பு: குறவர் மனையிலே நிகழும் வேலன் வெறியாடலைப் பற்றிய செய்திகள்.

(தலைமகன் தன்னை மணந்துகொள்ளாமல் களவிலேயே மனஞ்செலுத்தத் தலைவி மனம் வருந்தி, இப்படி, அவன் கேட்குமாறு தோழியிடம் சொல்லுகிறாள். இரவுக்கு அஞ்சிய அச்சமும், தாயின் ஐயமும், விரைவிலே மணம் வேண்டு மென்பதைக் குறிப்பாக உணர்த்துவன காண்க.)