பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


42 அகநானூறு - மணிமிடை பவளம்

139. அவர் நிலை யாது?

பாடியவர்: இடைக்காடனார்: திணை: பாலை. துறை: பிரிவிடை மெலிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

(தலைமகன் த்ன்னைப் பிரிந்ததனால் மெலிவுற்று வாடிய தலைவி. தன் தோழியிடம், தன்னுடைய ஆற்றாமையினை மனம் விட்டுப் பேசுகிறாள். தலைவியின் காதல்கனிந்த உள்ளச் செல்வியை நன்றாக உணர்த்துவது இச் செய்யுள்)

துஞ்சுவது போலஇருளி, விண்பக் இமைப்பது போலமின்னி, உறைக்கொண்டு ஏறுவதுப் போலப் பாடுசிறந்து உரைஇ நிலம்நெஞ்சு உட்க ஒவாது சிலைத்தாங்கு,

ஆர்தளி பொழிந்த வார்பெயற் கடைநாள்; 5

ஈன்றுநாள் உலந்த வாலா வெண்மழை

வான்தோய் உயர்வரை ஆடும் வகைறைப் புதல்ஒளி சிறந்த காண்பின் காலைத், தண்நறும் படுநீர் மாந்திப், பதவு அருந்து வெண்புறக்கு உடைய திரிமருப்பு இரலை; 10 வார்ணல் ஒருசிறைப் பிடவுஅவிழ் கொழுநிழல், காமர் துனையொடு ஏமுற வதிய, அரக்குநிற உருவின் ஈயல் மூதாய் பரப்பி யவைபோற் பாஅய்ப், பலவுடன் நீர்வார் மருங்கின் ஈர்அணி திகழ; 15

இன்னும் வாரார் ஆயின் - நன்னுதல்! யாதுகொல் மற்றவர் நிலையே? காதலர் கருவிக் கார்இட இரீஇய பருவம் அன்று, அவர்: “வருதும் என்றதுவே.

நீரையுடைய மேகமானது, சாக்காட்டைப் போல இருண்டு, வானத்தைப் பிளக்க இமைப்பதுபோல மின்னி, நீரைக் கொண்டு எழும்புவது போல ஒலிமிகுத்துப், புடைபெயர்ந்து உலாவி, நிலத்தின் நெஞ்சு திடுக்கிடும்படியாக ஓயாது ஒலித்து, நீரை நீடித்துப் பொழிந்த பெயலையுடைய கார்காலத்தின் கடைநாளிலே, -

மழைபெய்து நாட்சென்ற தூயதல்லாத வெண்மேகங்கள், வானை அளாவி உயர்ந்த மலையின் உச்சியிலே உலாவுகின்ற விடியற் காலையிலே, புதல்கள் ஒளிமிகுந்தவையாய்க் காண்பதற்கு இனிதாகத் தோன்றும் காலத்திலே,