பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


44 அகநானூறு - மணிமிடை பவளம்

(தலைவனின் களவு உறவைப் பாங்கன் முறையானதென

ஏற்றுக்கொள்ளவில்லை. அதனைச் செய்யக் கூடாதது எனக்

கடிந்து உரைக்கவும் தொடங்கினான்.அதனைக் கேட்ட தலைவன், தன்னுடைய காதலின் மிகுதியைக் கூறுகின்றான்.)

பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர் இருங்கழிச் செறுவின் உழாஅது செய்த வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றி, என்றுழ் விடா குன்றம் போகும் கதழ்கோல் உமணர் காதல் மடமகள் 5

சில்கோல் எல்வளை தெளிர்ப்ப வீசி ‘நெல்லின் நேரே வெண்கல் உப்பு எனச் சேரி விலைமாறு கூறலின்,மனைய விளியறி ஞமலி குரைப்ப, வெரீஇய மதர்கயல் மலைப்பின் அன்னகண் எனக்கு, 10

இதைமுயல் புனவன் புகைநிழல் கடுக்கும் மாமூ தள்ளல் அழுந்திய சாகாட்டு எவ்வந் தீர வாங்குந் தந்தை

கைபூண் பகட்டின் வருந்தி வெய்ய உயிர்க்கும் நோயா கின்றே. 15

பெரிய கடலிடத்து மீன்பிடி வேட்டத்தைச் செய்கின்ற சிறுகுடிலிலே வாழும் பரதவர்கள், பெரிய உப்பங் கழியாகிய வயலிலே உழாமலே விளைவித்த வெள்ளிய கல்லுப்பினோடு, கோடையாற் பிளந்த கன் முழைகளையுடைய குன்ற வழிகளிலே, தங்களிற் கூடுதலைச் சாற்றிச்செல்லும் விரைகின்ற கோலினையுடைய உப்பு வாணிகரது, காதலையும் மடப்பத்தையுமுடைய மகள்,

கோற்றொழில் அமைந்த இலங்குகின்ற சிலவாகிய வளைகள் ஒலிப்பத் தன் கையை வீசி, ‘வெள்ளிய கல்லுப்பு நெல்லினுக்கு ஒத்த அளவே என்று,சேரிகளிலே விலை மாற்றுக் கூறுவதனாலே, மனையின் கண்ணுள்ள நாய் இது வேற்றுக் குரலெனக் குரைத்துவர, அதனைக் கண்டு வெருவிய, போரிடும் - இயல்புடைய, மதர்த்த கயல்களிரண்டினைப் போன்ற அவள் கண்கள், எமக்கு, -

புதுப்புனமாக்கும் பொருட்டாக முயல்கின்ற புனமுடையா னாகிய குறவன், பழம்புனத்தைச் சுட்டு எரித்ததனால் உண்டாக்கிய புகையின் நிழலை ஒக்கும் கரிய பழஞ்சேற்றிலே அழுந்திய உப்பு வண்டியின் துன்பம் நீங்க, வருந்தி வலிக்கின்ற