பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


{

48 அகநானூறு - மணிமிடை பவளம்

கோடற்கு வருவாரென்று துணிந்து, தான் ஆற்றுவல் என்பது படத் தோழிக்குத் தலைமகள் தன் நிலையைச் சொன்னாள் என்று கொள்க. மழை கால் நீங்கிய விசும்பில், மதி நிறைந்து

கறுமீன் சேரும் நாளில், மறுகு விளக்குறுத்து, மாலை தூக்கிப்,

பலருடன் துவன்றிய விழாவினை உடன் அயரத், தலைவர் வருவாராக என்றனள்.

பாடபேதங்கள்: 10. துவன்றி விழவுடன் 18. பாசவல் இடித்த பெருங்கா.19. வெரீஇக் கமஞ்சூல் 21. மரத்து. 25. புலிக்கோளுற்ற 29. வேங்கட வெற்பிற்.

142. வடுப்படத் தழுவினாள்!

பாடியவர்: பரணர். திணை: குறிஞ்சி. துறை: இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. சிறப்பு: மாந்தரஞ் சேரல் இரும்பொறையின் வள்ளன்மை; நன்னனின் பாழிக்காவலனான மிஞரிலி அதிகனை வென்ற வெற்றிச் சிறப்பு.

(தன் காதலி இற்செறிப்பிலே சிறைப்பட்டமை காரணமாக அவளைக் கூடும் வாய்ப்பற்று வாடினான் தலைவன். இரவுக் குறியும் வாய்க்கப் பலப்பல இடையூறுகள் எழுந்தன. எல்லாம் நீங்கி, இரவிலே குறித்த இடத்திலே அவளைக் கண்டு கூடியும் மகிழ்ந்தவன், அந்த இன்பச் செவ்வியை இப்படிச் சொல்லுகிறான்.)

இலமலர் அன்ன அம்செந் நாவிற்

புலம்மீக் கூறும் புரையோர் ஏத்தப்,

பலர்மேந் தோன்றிய கவிகை வள்ளல் நிறையருந் தானை வெல்போர் மாந்தரம்பொறையன் கடுங்கோப் பாடிச் சென்ற 5

குறையோர் கொள்கலம் போல, நன்றும் உவஇனி-வாழி, நெஞ்சே!-காதலி முறையின் வழா அது ஆற்றிப் பெற்ற கறையடி யானை நன்னன் பாழி, ஊட்டரு மரபின் அஞ்ன் வரு பேய்எக் 10

கூட்டெதிர் செகண்ட வாய்மொழி மிகுதிலி புள்ளிற்கு ஏமம் ஆகிய பெரும்பெயர் வெள்ளத் தானை அதிகற் கொன்றுஉவந்து ஒள்வாள் அமலை ஞாட்பிற், பலர் அறி. வுறுதல் அஞ்சிப், பைப்பய, - 15