பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மூலமும் உரையும் புலியூர்க்கேசிகன் # 49

நீர்த்திரள் கடுக்கும் மாசில் வெள்ளிச் சூர்ப்புறு கோல்வளை செறித்த முன்கைக் குறை அறல் அன்ன இரும்பல் கூந்தல், இடனில் சிறுபுறத்து இழையோடு துயல்வரக், கடல்மீன் துஞ்சும் நள்ளென் யாமத்து, 20 உருவுகிளர் ஏர்வினைப் பொலிந்த பாவை இயல்கற் றன்ன ஒதுக்கினள் வந்து, பெயல் அலைக் கலங்கிய மலைப்பூங் கோதை இயல்எறி பொன்னின் கொங்குசோர்பு உறைப்பத் தொடிக்கண் வடுக்கொள - முயங்கினள்: 25

வடிப்புறு நரம்பின் தீவிய மொழிந்தே.

அரசர்கள் பொருள்தேடி வருவதற்கு உரிய முறைமைகளி னின்றும் சற்றும் பிறழாமல், அவற்றையெல்லாம் அவ்வம் முறைகளோடும்கூடி இயற்றிப் பெருஞ் செல்வத்தைப் பெற்றவனும், உரல்போலும் அடியினையுடைய யானைப் படைகளை உடையவனுமான, நன்னன் என்பவனுக்கு உரியது ‘பாழி’ என்னும் பேரூர். அந்தப் பேரூரிலே, பலியூட்டு நிகழ்த்துவதற்கு அரிய தன்மையினையுடைய அச்சம்வருகின்ற பேய்க்குப் பலி யூட்டு நிகழ்த்துதலை ஏற்றுக்கொண்டான் வாய்மொழி தவறாதவனான மிஞலி’ என்பவன். புட்களுக்குப் பாதுகாவலாகிய பெரும்புகழினைக்கொண்ட வெள்ளம் போன்ற சேனாவீரர்களையுடைய அதிகன் என்பவனைக் கொன்று, அந்த மகிழ்வுடன் ஒள்வாள் அமலை’ என்னும் வெற்றிக்கூத்தினை ஆடி, ஏற்றுக்கொண்டபடியே பேய்க்கு ஊட்டு நிகழ்த்தினான். அவன் அப்படி ஒள்வாள் அமலை ஆடியபோது, எங்கும் ஏற்பட்ட ஆரவாரப் பேச்சுக்களைப் போலப் பலரும் எம் களவு ஒழுக்கத்தை அறிந்து பேசப்படுதலை நினைத்து அஞ்சுபவள் நம் காதலியான அவள்.

நீரின் திரட்சியைப் போன்றிருக்கும், குற்றமற்ற சொக்க வெள்ளியினாலாகிய, வளைவு பொருந்திய கோற்றொழி லமைந்தவளைகள் செறிந்த முன்கைகளை உடையவள்; பிடரியிலே குறைந்து வருகின்ற கருமணலைப்போன்ற கரிய பலவாகிய கூந்தலானது அணிகளுடன்கூடி இனி இடமில்லை யாகும்படியாகக் கிடந்து அசைந்துகொண்டிருக்க விளங்குபவள்; கடல் மீன்களும் உறங்கும் ‘நள்’ என்னும் ஒலியினையுடைய இரவின் நடுயாமத்திலே, அழகு கிளர்ந்த பொலிவினை யுடையதும், செய்யும் தொழிலாற் சிறப்புற அமைந்ததுமான