பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


50 - அகநானூறு - மணிமிடை பவளம்

பொற்பாவையானது, நடைகற்று வருவதுபோன்று, ஒதுங்கி ஒதுங்கிப் பையப்பைய குறியிடத்திற்கு வந்து சேர்ந்தனள்,

மழைபெய்து அலைத்தலினாலே கலங்கிய மலைப் பூக்களால் தொடுத்த மாலையினின்றும், உலைக்களத்துக் கொல்லன் காய்ச்சி அடிக்குங் காலத்தே தெறித்து வீழும் பொற்றுகள் போன்ற மகரந்தத்துகள்கள் துளித்து வீழ, வடித்தல் அமைந்த யாழ் நரம்பினின்றும் எழும் ஒலிபோல இனிக்க இனிக்கப் பேசித், தன் தொடியிட்ட இடத்திலே வடுவுண்டாகு மாறு, என்னையும் கட்டித் தழுவினாள்.

இலவம்பூப் போன்ற அழகிய சிவந்த தம் நாவினால் அறிவுடைமை காரணமாக மேலாகக் கூறப்பெறுகின்ற உயர்ந்தோர்கள் புகழுமாறு, அரசர்கள் பலருள்ளும் மேம்பட்டு விளங்கியவனும், வரையின்றிக் கொடுத்தலால் எப்போதும் கவிந்தேயிருக்கும் கைகளை உடையவனாக விளங்கும் வள்ளலும், ஒருசார் ஒருங்கே நிறுத்துதற்கு அரிய பெரும் படைத்திரளினை உடையவனும், போர்களிலே வெற்றி பெறுபவனும் ஆகிய, மாந்தரம் பொறையன் கடுங்கோ என்னும் சேரமன்னனைப் பாடிச்சென்ற வறுமையாளர்களின் கொள்கலம் நிறைவுற்று விளங்குவதுபோல, நெஞ்சமே! இனி, நீயும் நன்றாக நிறை வெய்தி மகிழ்வாயாக! நீ வாழ்க! o

என்று, இரவுக்குறி வந்து நீங்குந் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொன்னான் என்க.

சொற்பொருள்: 1 இலமலர் - இலவ மலர். 2. புலம்மீக்கூறும் புரையோர் - அறிவுடைமை காரணமாக மேலாகக் கூறப் பெறுகின்ற உயர்வுடையோர். 6. குறையோர் - குறையுடையோர்; குறையினையே என்றும்அறிந்து பழகிய கொள்கலமும் ஆம் 8. முறை - முறைமை 9. கறை - உரல், கறையுமாம்.101. பேய்க்கூடு” எனக்கூட்டியும், அதனை எதிரேற்றுக் கொண்ட மிஞரிலி என உரைப்பர். வாய்மொழி - வாய்மையுடைய பேச்சு; சொன்ன சொல் தவறாத பேச்சு 12. புள்ளிற்கு ஏமம் ஆகிய - பகைப் படைகளைக் கொன்று புட்களுக்கு உணவாக்கி அவற்றுக்குப் பாதுகாவல் ஆகிய 13. பெரும் பெயர் வெள்ளத்தானை - பெரும் பெயரான ‘வெள்ளம் என்ற எண்ணினளவு வீரர்களைக் கொண்ட தானையுமாகும். அதிகன் - அதியன் ஆய் எயினன். இதனைப் பின்வரும் 148 ஆவது பாடலும் உணர்த்தும். 14. ஒள்வாள் அமலை - வலிகெழுதோள் வாள் வயவர் ஒலிகழலா னுடன் ஆடியது’ என்று புறப்பொருள் வெண்பாமாலை கூறும். வாளாற்றல் மிகுந்த வீரர் தம் அரசருடன் கூடியாடும் வென்றிக்