பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மூலமும் உரையும் _qogyGssi *_51

கூத்து இது. ஞாட்பு - பூசல், அதனால் எழுகின்ற ஆரவாரம். 17.சூர்ப்பு-வளைவு-19.சிறுபுறம்-பிடரி,22.ஒதுக்கினள்-ஒதுங்கி வருபவள். 23. மலைப் பூங்கோதை - மலைப் புக்களால் தொடுத்த கோதை, கோதை, பெண்களின் தலைமாலை. 24. கொங்கு - மகரந்தம், பூந்தாது. 26. தீவிய - இனிய

விளக்கம்: Dமிலி அதிகனைக் கொன்று ஆடிய ஒள்வாள் அமலை பலராலும் குறித்துப் பேசப்படுவதனாற்போல, இவர்களுடைய களவும் பிறர் அறியின், பலராலும் குறித்துப் பேசப்பட்டு அலர் உரைக்கப்படுவதாகும். அதற்கு அஞ்சியவள் ஒதுக்கினளாகப் பையப்பைய வந்தாள்’ என்க. அவளைப் பெறாது வறுமையுற்று வாடிக்கிடந்த நெஞ்சம், முயக்கம் பெற்ற அந்த அளவானே எய்தியநிறைவுக்கு மாந்தரஞ்சேரலைப் பாடிச்சென்ற குறையோர்களின் கொள்கலம் நிரம்பிவழியும் இயல்பைக் குறித்தனர்.

மேற்கோள்: ‘வினைபயன் மெய்யுரு என்னும் உவமவியற் சூத்திரவுரையில், ‘உருவுகிளர் ஏர்வினைப் பொலிந்த பாவை இயல் கற்றன்ன ஒதுக்கினள் என்றக்கால், வடிவுபற்றி உவமங் கொள்ளவே, உயிரில்லாதாள்போல அச்சமின்றி இரவிடை வந்தாளென்னும் பொருள் தோன்றும் என்றும்,

‘செல்வம் புலனே’ என்னும் மெய்ப்பாட்டியற் சூத்திரத்துத் ‘தொடிக்கண் வடுக்கொள. மொழிந்தே என்பது புணர்ச்சி பற்றிய உவகை என்னை? இவள் இவ்வாறு முயங்கினமையின் ‘உவவினி வாழிய நெஞ்சே என்றமையின் என்றும், பேராசிரியர் கூறுவர். -

பாடபேதங்கள் : 1. நிறையிருந்தானை மாந்தரன். 7. வாழி யென்னஞ், 8. முறையியன் வழாஅ. 13. அதியற் 23 பெயலலைக் கலக்கிய மிலைப்பூங், 22 வியலெறி.

143. கண்கள் நீர் சொரிந்தன!

பாடியவர்: ஆலம்பேரிச் சாத்தனார். திணை: பாலை. துறை: பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகனைத் தோழி தலைமகளது ஆற்றாமை கண்டு செலவு அழுங்குவித்தது. சிறப்பு: சேரர்கள் படைத்தலைவனாகிய பிட்டன் என்பவனுக்கு உரிமையுடைய குதிரைமலையின் வளம் கூறப்பட்டிருப்பது.

(தலைவன், தான் பொருள்தேடிவரும் பொருட்டாகப் பிரியப் போவதாகச் சொன்னான். அவ்வளவிலேயே, அவன் காதலியின் துயரம் பெரிதாயிற்று. அதனை அறிந்த அவளுடைய தோழி