பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மூலமும் உரையும் புலியூர்க்கேசிகன் 53

அரியதுமான சுரநெறியினைக் கடந்து வேற்று நாட்டிற்குச் சென்று சேர்வோம் என்று கூறினாய்; நீ கூறிய அந்தச் சிறுமையான சொற்களைக் கேட்டனள் தலைவி.

பழிச் சொற்கள் எவையும் சேர்தலில்லாத, வெம்மையுடன் போரிடுகின்ற வல்லமையினை உடையவன் சேரர்படைத் தலைவனாகிய பிட்டன். பரிசில் பெற்று வாழும் ஆசையுடனே தன்பால் வருகின்ற இரவலர்களுக்கு நல்ல பல அணிகலன்களை அளிப்பவனும் அவன். வெற்றியினைத் தப்பாது விளைவிக்கின்ற வாய்மையுடைய வாளினை உடையவனும் அவன். அவன் தன் கால்களிலே வீரக்கழல்கள் புனைந்திருப்பான். கார்மேகங்கள் தவிழுகின்ற உயர்ந்த மலையுச்சிகளையுடைய குதிரைமலை அவனுடையது.

அதன் சாரல்களிலே, பாறையிடத்தேயுள்ள நெடிதான சுனையிலே மழைத்துளிகள் வீழ மலர்ந்ததும், தண்மையான மணம் கமழ்வதுமான நீல மலர்களினின்றும் நீர்த்துளிகள் வீழ்ந்துகொண்டிருக்கும். அதைப்போல, இவளுடைய கருவிழி களும் நின் சொற்களைக் கேட்டதும், நீர் சொரியத் தொடங்கி விட்டன. அதனைக் கண்டு யான் தான் வருந்து கின்றேன் ("நீ வருந்தினாயில்லை; வருந்தினால், இப்படிப் பிரிய நினைக்கமாட்டாய் அன்றோ?’ என்பது குறிப்பு)

என்று, பொருள்வயிற் பிரியக்கருதிய தலைமகனைத் தோழி தலைமகளது ஆற்றாமைகண்டு செலவழுங்குவித்தாள் என்க.

சொற்பொருள்: 1. கைம்மிக அளவுக்கு அதிகமாக 3. ஒல்லென ஒல்லென்னும் ஒலியுடனே வாடிய இைைலகளைக் காற்று அலைத்து உதிர்க்கும்போது எழுகின்ற ஒலி இது. 4. கோடை - மேல்காற்று. 5. தேக்கமல் - தேக்கு மரங்கள் செறிந்த 6. முளி அரில் காய்ந்துபட்ட தூறுகள். 7. விடர் முகை மலைப் பிளப்புகளின் முனைகள், 9. சிறு சொல் சிறுமை உடையதான சொல்.10. வானவன் - சேரன், வசையின் வெம்போர் வானவனும் ஆம், 13 மை - கருமை: கார் - மேகம். குதிரை - குதிரை மலை; தர்மபுரிக்கு அருகே இருப்பது.

உள்ளுறை: முன்னரே வாடிய தேக்கினது இலையைக் கோடையானது சினை வறியவாக இழுத்துப் போவதுபோல, நுமது பிரிதற்குறிப்பால் முன்னரே வாடிய தலைவியின் உயிரை நும் பிரிவு உடல் பாழாக இழுத்துக்கொண்டு போய் விடும் எனத் தோழி குறிப்பால் உணர்த்தினாள் என்று கொள்க. சினை

கிளை. ” -