பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மூலமும் உரையும்
புலியூர்க்கேசிகன் * 55
 

        மானடி மருங்கில் பெயர்த்த குருதி
        வான மீனின் வயின்வயின் இமைப்ப,
        அமரோர்த்து, அட்ட செல்வம்
        தமர்விரைந்து உரைப்பக் கேட்கும் ஞான்றே.

“அழகிய அணிகலன்கள் அணிந்துள்ள தோழியே நம்மவர் வந்துவிடுவோம் என்று உரைத்துச் சென்ற நாளும் பொய்த்துவிட்டன; செவ்வரி பரந்த அழகிய மையுண்ட கண்களினின்றும் ஒழுகும் கண்ணிரும் நிற்கவில்லை; தண்மையான கார்காலத்திற்கு ஈன்ற பசுமையான கொடியினையுடைய முல்லையின் கூர்மையான முனையையுடைய வெள்ளிய மொட்டு விரிந்த பூத்தொடுத்த மாலைகுடும் அழகினை இழந்து விட்ட எம் கூந்தலைப்பற்றியும் அவர் நினையாதவராயினர்; காதன் மனைவியை வாடவிடுவது அறமல்லவே என அறத்தினை கருதியும் அவர் அஞ்சினார் அல்லர்; இவ்வாறெல்லாம் ஆயினமையால் அவரிடத்தினின்றும் நமக்கு அருள் செய்தலான எண்ணம் மாறிப்போன தென்றாலும் மாறிப்போகட்டும்’ என்றெல்லாம் சிறுமையான சொற்களைச் சொல்லித்தான் பெரிதாக வருந்துபவள் நம் காதலி. ஆயினும்,

வானத்திலே இடிய்ேறானது எழுந்து முழங்கின தென்றாலும், அதற்கு எதிராகத் தானும் எழுந்து முழங்கும் மதம் பொருந்திய போர்யானைகள் சுற்றிக்கொண்டிருப்பது நம் பாசறை, போர் செய்தலை விரும்பி எழுந்த வீரர்களின் கையிடத்தவான கூரிய வாள்களின் குவிந்த முனைகள் சிதைவுறுமாறு பகைவர்களைக் கொன்ற காலத்திலே, களத்தில் குதிரைக் குளம்புகள் பதிந்த பள்ளங்களிலே பாய்ந்து கிடக்கும் குருதியானது, வானத்து ஆதிரையாகிய மீனைப்போல இடந்தோறும் விட்டுவிட்டு மின்னிக் கொண்டிருக்கும்; அவ்வாறு போர்த்திறன் அறிந்து போரியற்றி வென்று நாம் பெற்ற செல்வத்தைப்பற்றி, நம் சுற்றத்தார்கள் விரைந்து சென்று, அவளிடம் சொல்லி நம்மைப் புகழ்வார்கள்.

அதனைக் கேட்டபோது, அவள் குளிர்ச்சிபொருந்திய நம் மார்பகத்து நறுந்தார் குழையுமாறு, நம்முடன் தன்னுடைய துயரமெல்லாம் தீரத் தழுவுதலைப் பெற்றவளைப்போல, உள்ளம் மகிழ்வாள் அல்லளோ? நெஞ்சமே! நீ வாழ்வாயாக!

என்று, வினைமுற்றிய தலைவன் தன் நெஞ்சிற்கு உரைப்பானாய்த் தேர்ப்பாகற்குச் சொன்னான் என்க.

சொற்பொருள்: 2 அரி - செல்வரி, ஏர் - அழகு. 3. கார்க்கு - கார் காலத்திற்கு, தலைப் பெயலுக்கும் ஆம். 4. வைவாய் -