பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மூலமும் உரையும் புலியூர்க்கேசிகன் 59

மேற்கோள்: ‘கூழுடைத் தந்தை..முயங்கும் என நெல்லுடைமை கூறிய அதனானே, அவள் வேளாண் வருண மென்பது பெற்றாம் எனக், கொண்டு தலைக்கழியினும்’ என்னும் பொருளியற் சூத்திர உரையுள் நச்சினார்க்கினியர் காட்டினர். . .

பாடபேதங்கள்: 6. அத்தந் தமியள். 16 துயக்கில் வாழ்க்கை. 22. அமர்க்கண் மஞ்ஞையை. .

146. அழகு வேண்டாதவர்!

பாடியவர்: உவர்க்கண்ணுர்ப் புல்லங்கீரனார். திணை: மருதம், துறை: வாயில் வேண்டிச் சென்ற பாணற்குத் தலைமகள் வாயில் மறுத்தது.

(தன் தலைவியை மறந்துவிட்டுப் பரத்தையர்களுடன் கூடித் திரிந்தான் ஒரு தலைவன். அவன் செயலை அறிந்த அவள் ஊடிப் பிணங்கி இருந்தாள். அவளுடைய நினைவு எழப்பாணன் மூலம் தான் மீண்டும் வீட்டுக்குவர நினைப்பதைச் சொல்லியனுப்பித் தன் தலைவியின் இசைவைப் பெற்றுவர வேண்டுகிறான் தலைவன். பாணனிடம் தலைவனின் வரவை ஏற்காது மறுத்துத் தலைவி இப்படிக் கூறுகிறாள்.) .

வலிமிகு முன்பின் அண்ணல் ஏஎறு பனிமலர்ப் பொய்கைப் பகல்செல மறுகி மடக்கண் எருமை மாண்நாகு தழீஇ, படப்பை நண்ணிப், பழனத்து அல்கும் கலிமகிழ் ஊரன் ஒலிமணி நெடுந்தேர், 5

ஒள்ளிமழை மகளிர் சேரிப், பல்நாள் இயங்கல் ஆனது ஆயின், வயங்கிழை யார்கொல் அளியள் தானே-எம்போல் மாயப் பரத்தன் வாய்மொழி நம்பி . வளிபொரத் துயல்வரும் தளிபொழி மலரின் 10 கண்பனி ஆகத்து உறைப்பக், கண் பசந்து ஆயமும் அயலும் மருளத், தாயோம்பு ஆய்நலம் வேண்டா தோளே? . எல்லா வலியும் மிகுதற்குக் காரணமான உடல்வலிமை யினையும் தலைமையினையும் உடைய எருமைக் கடாவானது, குளிர்ந்த தாமரைப் பொய்கையிலே, மாலைவேளைவரை பகலெல்லாம் கிடந்து நெடும்பொழுது மறுகிவிட்டு, மடப்பம் வாய்ந்த கண்களையுடைய மாட்சியுள்ள எருமைக்கிடாரியைத்