பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


62 அகநானூறு - மணிமிடை பவளம்

ஒர்த்தல் - உற்று அறிதல். 8. கவலை கவறுபட்ட வழிகள். 10. அயர்ந்திசின் - விரும்புவேன்.

உள்ளுறை: பிணவின் பசிக்கு இரங்கி உழைமானின் குரலை ஒர்க்கும் ஏற்றை உழுவையையுடைய நீளிடையிலே சென்றவ ராதலால், நம் தலைவர் நம் நோக்கு இரங்கிவிரைய வருவர் என்னும் கருத்தால், வெள்ளி வீதியைப் போலச் செல்லத் துணிந்திலேன் என்று தலைவி குறிப்பால் உணர்த்தினாள் என்க.

மேற்கோள்: ‘பாலைப் பொருட்கண் இரங்கற் பொருள் நிகழும் என்பதற்குக் கொண்டு தலைக் கழியினும் என்னும் சூத்திர உரையினும், ‘வெள்ளி வீதியைப் போல நன்றும், செலவயர்ந்திசினால் யானே’ என்பதின்கண், ‘பெயர் அகத் திணைக்கண் சார்த்துவகையான் வந்ததன்றித் தலைமை வகையாக வந்திலது என, மக்கள் நுதலிய என்ற சூத்திரத்து உரையினும் நச்சினார்க்கினியர் காட்டினர்.

148. மாலை வருதல் வேண்டும்!

பாடியவர்: பரணர். திணை: குறிஞ்சி. துறை: பகல் வருவானை இரவு வருக என்றது. சிறப்பு: ஆய் எயினன் மிஞலியோடு பொருது களம்பட்டு வீழ்ந்த செய்தி.

(தலைவன் பகற்குறிக் கூட்டத்தை விரும்பியவனாக வருதலை அறிந்த தோழி, அவன் மனம் அப்படியே களவு நுகர்ச்சியிலே நிலைத்துவிடாமல், வரைந்து கோடல் முயற்சியிலே ஈடுபட வேண்டும் என விரும்புகிறாள். அவனைப், பகலில் வருவதை நிறுத்தி, இரவு வருக என்று சொல்பவளே போல, இரவுக்குறியின் ஏதத்தையும் உரைத்து, அதனையும் மறுத்து, வரைந்து கோடலை மேற்கொள்ளுமாறு வற்புறுத்துகின்றாள்.)

பனைத்திரள் அன்ன பருவர் எறுழ்த் தடக்கைச் கொலைச்சினந் தவிரா மதனுடைய முன்பின், வண்டுபடு கடாஅத்து, உயர்மருப்பு யானை தண்கமழ் சிலம்பின் மரம்படத் தொலைச்சி; உறுபுலி உரறக் குத்தி; விறல்கடிந்து, 5

சிறுதினைப் பெரும்புனல் வவ்வும் நாட! கடும்பரிக் குதிரை ஆஅய் எயினன் நெடுந்தேர் மிஞ்லியொடு பொருது, களம் பட்டடெனக் கானிய செல்லாக் கூகை நாணிக் - கடும்பகல் வழங்கா தாஅங்கு, இடும்பை 1 O