பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


66 - அகநானூறு - மணிமிடை பவளம்

சொற்பொருள்: 1. சிதலை - கறையான். 2. நெடுஞ்செம் புற்று - உயரமான சிவந்த புற்று. ஒடுங்கு இரை உள்ளே மறைந்து கிடக்கும் இரையான புற்றாஞ் சோறு. முனையில் - வெறுத்தால், 3. வான்பூ - வெண்மையான பூ எண்கு கரடி இருங்கிளை பெரிய சுற்றம், 9. யவனர் - அயோனியர் போன்ற மத்திய தரைக்கடல் நாட்டவர். கலம் - மரக்கலம். 10, கறி மிளகு, 12. படிமம் - பாவை. 16. ஒடியா விழவு - இடையறாத விழாக்கள். 17. குண்டு சுனை - வட்டமான ஆழச்சுனை.

150. தாய் காவற்படுத்தினாள்!

பாடியவர் : குறுவழுதியார். திணை: நெய்தல். துறை: பகற்குறி வந்து கண்ணுற்று நீங்கும் தலைமகனைத், தோழி, தலைமகளை இடத்துய்த்துவந்து, செறிப்பறிவுறீஇ, வரைவு கடாயது.

(கடற்பாங்கிலே கண்டு காதலித்துக் கூடி மகிழ்ந்தனர் காதல் இருவர். ஒரு நாள் பகலிலே சந்திப்புக்குக் குறித்த இடத்திலே தன் தலைவியைக் காணாது நீங்கும் தலைவனைத் தோழி எதிர்ப்படுகிறாள். தலைவியைக் குறித்த இடத்திலே விட்டு வருபவள் அவள். தலைவனிடம், தலைவி அவனைப் பிரிந்து படும் வருத்தத்தையும், தாய் அவர்கள் உறவை அறிந்து தலைவியை வீட்டிலே காவலில் வைத்ததையும் கூறி, விரைவிலே வந்து மணந்துகொள்ள வேண்டுகிறாள்.)

பின்னுவிட நெறித்த கூந்தலும், பொன்னென ஆகத்து அரும்பிய சுணங்கும், வம்புவிடக் கண்ணுருத்து எழுதரு முலையும் நோக்கி, ‘எல்லினை பெரிது’ எனப் பன்மாண் கூறிப் பெருந்தோள் அடைய முயங்கி, நீடு நினைந்து, 5 அருங்கடிப் படுத்தண்ள் யாயே; கடுஞ்செலல் வாட்சுறா வழங்கும் வளைமேய் பெருந்துறைக், கனைத்த நெய்தற் கண்போன் மாமலர் நனைத்த செருந்திப் போதுவாய் அவிழ, மாலை மணியிதழ் கூம்பக் காலைக் 10 கள்நாறு காவியொடு தண்ணென் மலருங் கழியுங், கானலுங் காண்தொறும் பலபுலந்து; வாரார் கொல்? எனப் பருவரும்தார் ஆர் மார்ப! நீ தணந்த ஞான்றே!