பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மூலமும் உரையும் புலியூர்க்கேசிகன்-67

மாலைகள் விளங்குகின்ற மார்பினை உடையவனே! நின்னைப் பிரிந்த பொழுதிலேயே, விரைந்து செல்லும் இயல்பினையுடைய வாட்சுறா மீன்கள் திரியும் சங்கினம் மேய்கின்ற பெரிய துறையினிடத்தே, தழைத்த நெய்தலது கண்போன்ற பெரிய மலரானது மாலைப்போதிலே தன் அழகிய இதழ்களைக் குவித்துக் கொள்ளக், காலையிலே செருந்தியின் அரும்பிய போதுகள் இதழ்விரியத், தேன்மணம் வீசுகின்ற காவிமலரோடு சேர்ந்து தானும் தண்ணென்று மலரும் அவ்வேளையிலே, கழியையும் கானற்சோலையும் காணும் போதெல்லாம், பலவும் நினைந்துநினைந்து வெறுப்புற்று, அவர் வரமாட்டார் போலும் வரமாட்டார்போலும்!’ என வருந்துபவள் நின்காதலி.

அவள் அன்னையானவள், பின்னலிடும்படியாக வளர்ந்து நெறித்தலையுடைய அவள் கூந்தலையும், பொன்போல மார்பிலே தோன்றிய தேமலையும், கச்சுக் கிழியுமாறு கண்கள் உருப்பெற்று எழுந்த முலையினையும் நோக்கினள், பெரிதும் அழகு பெற்றனை மகளே! எனப் பலபல மாட்சியுடைய சொற்களைச் சொல்லிப், பெரிய தோள்கள் முற்றும் - பொருந்துமாறு தழுவிக்கொண்டு, நெடுநேரம் நினைவிலே ஆழ்ந்து, அவளை அரிய காவலுக்கும் உட்படுத்தினள். (ஆகவே, ‘அவளை நீ குறியிடத்திலே காண்பதற்கில்லை; விரைந்து வந்து மணந்து கொள்வாயாக’ என்று பகற்குறி வந்து கண்ணுற்று நீங்கும் தலைமகனைத் தோழி, தலைமகளை இடத்துய்த்து வந்து செறிப்பு அறிவுறீஇ வரைவுகடாயினாள் என்க.)

சொற்பொருள்: 1. நெறித்த நெறிப்பட்ட வளைந்து நெளிந்த 2 வம்புவிட - கச்சுக் கிழிய.4, எல்லினை - ஒளியுடையை ஆயினை. 7. வாள்சுறா - வாள்போன்ற இது சுறாமீன். வழங்கும் - திரியும், 8. கனைத்த தன்ழத்த - 9. நனைத்த அரும்பிய, 1. காவி - செங்கழு நீர். -

விளக்கம்: கழியும் கானலும் காணக்காண வருந்துதல், தலைவன் வரக் காணாமையினாலும், அவை தாம் இயற்கைப்

புணர்ச்சியிலே கூடிக் களித்த நினைவுகளை எழுப்புதலாலும்.

- மேற்கோள்: “அளவு மிகத் தோன்றினும் என்னும் துறைக் கண், இச்செய்யுள் தோழி செவிலி கூறியதைக் கொண்டு சொல்லியது எனக், களவலராயினும் என்ற சூத்திர உரையிலே நச்சினார்க்கினியர் காட்டினர். -

‘ஏதம் ஆய்தல்’ என்னும் மெய்ப்பாட்டிற்கு வாரார் கொல் எனப் பருவரும் தாரார் மார்ப நீ தணந்த ஞான்றே என்பதை,