பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


70 அகநானூறு - மணிமிடை பவளம்

நுண்கோல் அகவுநர்ப் புரந்த பேரிசைச் சினங்கெழு தானைத் தித்தன் வெளியன், 5

இரங்குநீர்ப் பரப்பின் கானலம் பெருந்துறைத், தனம்தரு நன்கலம் சிதையத் தாக்கும் சிறுவெள் இறவின் குப்பை அன்ன உறுபகை தரூஉம் மொய்ம்மூசு பிண்டன் முனைமுரண் உடையக் கடந்த வென்வேல், 10

இசைநல் ஈகைக் களிறுவீசு வண்மகிழ்ப் பாரத்துத் தலைவன், ஆர நன்னன்; ஏழில் நெடுவரைப் பாழிச் சிலம்பிற் களிமயிற் கலாவத் தன்ன தோளேவல்வில் இளையர் பெருமகன்; நள்ளி 15

சோலை அடுக்கத்துச் சுரும்புஉண விரிந்த கடவுட் காந்தள் உள்ளும் பலவுடன் இறும்பூது களுலிய ஆய்மலர் நாறிவல்லினும் வல்லார் ஆயினும் சென்றோர்க்குச் சாலவிழ் நெடுங்குழி நிறைய வீசும், 20 மாஅல் யானை ஆஅய் கானத்துத் தலையாற்று நிலைஇய சேயுயர் பிறங்கல் வேயமைக் கண்ணிடை புரைஇச் சேய ஆயினும், நடுங்குதுயர் தருமே. நுண்மையான தலைக்கோலினையுடைய பாணர்களைப் புரந்த பெரும்புகழினை உடையவன், சினம் கெழுமிய பெரும் படையினை உடையவன், ‘தித்தன் வெளியன்’ என்னும் குறுநிலத் தலைவன். ஒலிக்கும் நீர்ப்பரப்பினையுடைய கானற்சோலைகள் நிறைந்த, அழகிய அவனது பெரிய கடற்றுறைகளிலே, பொன்னைக் கொண்டு வந்து தருகின்ற நல்ல மரக்கலங்கள் சிதையுமாறு, சிறிய வெள்ளையான இறாமீனின் தொகுதிகள் தாக்கிகொண்டிருக்கும். அவைபோலத் தாக்கி மிகுந்த பகையினைத் தந்துகொண்டிருந்தவன் வலிமிகுந்த “பிண்டன்’ என்பவன். அப்பிண்டனுடைய போர்முனைகளின் ஆற்றல் அழிய, அவனை வென்ற வெற்றி வேலினை உடையவன், நல்ல புகழ்மேவிய ஈகையினை உடையவன், பரிசிலர்களுக்கு களிறுகளையே பரிசிலாக வழங்கும் வண்மையாகிய களிப்பினை யுடையவன், ‘பாரம்’ என்னும் ஊர்க்குத் தலைவனாகிய ஆரம்பூண்ட சிறப்பினையுடைய நன்னன்’ என்பவன். நம்முடைய நெஞ்சத்தை நடுங்கச்செய்கின்ற அரிய துன்பமானது