பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
நூலினை அனுபவிக்க உதவும் வகையிலே, பாடினோர் வரலாறுகளும், பாடப்பட்டோர் வரலாறுகளும் பின் னிணைப்புக்களாக மிளிர்வது இந்நூலின் தனித்த சிறப்பாகும். தெளிவான உரையும், மற்றும் தேவையான குறிப்புக்களும் விளக்கங்களும், ஆங்காகே தரப்பட்டிருக்கின்றன. அவை கற்பவர்க்குப் பெரிதும் உதவுவன.

பொதுவாக, எந்த நூலுக்குமே அதற்குரிய உரையின் துணைமட்டுமே அந்த நூலின் முழு இனிமையினையும் அனுபவிக்கப் போதுமானதாகாது. ஒவ்வொரு பாடலையும் உள்ளத்துள்ளே எண்ணிஎண்ணி, அவற்றின் அமைவுடன் ஒன்றிக்கலந்து அனுபவிப்பதே உண்மையாக அவற்றை அறிந்து அனுபவிப்பதாகும். அதற்கு இந்நூல் ஒரளவுக்கு உதவியா யிருக்கும் என்று நம்புகின்றேன்.

! h

வாழ்க தமிழ்! வளர்க தமிழ்ப்புண்பு!

புலியூர்க் கேசிகன்