பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மூலமும் உரையும் - புலியூர்க்கேசிகன் 81

தலைவிக்குச் சென்று உணர்த்த, அப்போது தலைவி சொன்ன பதில் இது)

அரியற் பெண்டிர் அல்குற் கொண்ட பகுவாய்ப் பாளைக் குவிமுலை சுரந்த வரிநிறக் கலுழி ஆர மாந்திச் செருவேட்டுச் சிலைக்கும் செங்கண் ஆடவர். வில்லிட வீழ்ந்தோர் பதுக்கைக் கோங்கின் 5

z

எல்லி மலர்ந்த பைங்கொடி அதிரல் பெரும்புலர் வைகறை அரும்பொடு வாங்கிக் கான யானை கவள்ங் கொள்ளும் அஞ்சுவரு நெறியிடைத் தமியர் சென்மார் நெஞ்சுண மொழிப மன்னே-தோழி 10

முனைபுலம் பெயர்த்த புல்லென் மன்றத்துப் பெயலுற நெகிழ்ந்து, வெயிலுறச் சா அய்

வினையழி பாவையின் உலறி,

மனைஒழிந் திருத்தல் வல்லு வோர்க்கே!

“கள்விலை மகளிர் அல்குற்புறத்தே சேர்த்துக் கொணர்ந்த, விரிந்த வாயையுடைய பாளையாகிய குவிந்த முலையானது சுரந்ததும், பன்னாடையினாலே அரிக்கப்பெற்றதுமான, கள்ளின் நிறமுடைய வண்டலை வயிறார நிரம்பக் குடித்துவிட்டுப், போரை விரும்பி ஆரவாரிக்கின்ற சிவந்த கண்ணினரான வீரர்கள், வில்லிலே அம்புதொடுத்து எய்ய, அதற்கு இரையாகி வீழ்ந்தோரின் பதுக்கைகளிலேயுள்ள கோங்கமரத்தின் மேலே படர்ந்து, இரவிலே மலர்ந்துள்ள பசுமையான கொடியினை யுடைய அதிரலைப், பெரிய இருளானது புலர்கின்ற வைகறை வேளையிலே, அரும்போடு பற்றி இழுத்துக் காட்டு யானை யானது தானுண்ணும் கவளமாகக் கொள்ளும். அப்படிப்பட்ட அச்சந்தருகின்ற வழியினூடே தன்னந்தனியராகச் செல்பவர் நம் ‘தலைவர் என் பாய், தோழி!

போர்முனையானது வந்துற்றதனால், மக்களை எல்லாம் ஊரைவிட்டுப் போக்கிவிட்டு, அழகிழந்து கிடக்கின்ற ஊர் மன்றத்திலேயுள்ள பாவையானது, பெயர் உறுவதனாலே நெகிழ்ந்தும், வெயிலுறுவதனாலே சுருங்கியும் தன்னுடைய புனைதற் செயல் நலன் எல்லாம் அழிந்து வாடிக்கிடப்பது போல, அவரைப் பிரிந்து வீட்டிலே தனித்தொழிந்து இருத்தலை வல்லவர் எவராயினும் இருப்பின், அவர்பாற் பிரிதலைப் பற்றி அவர் உள்ளம் ஏற்றுக்கொள்ளுமாறு சொல்வாராக! (யான் அவரைப் பிரிந்தால் இறந்து படுவேன்; அந்தப்பாவைபோல