பக்கம்:அகநானூறு களிற்றியானை நிரை.djvu/102

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை44
௯௯
களிற்றியானை நிரை44. முல்லை


[வினைமுற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.]


வந்துவினை முடித்தனன் வேந்தனும் பகைவரும்
தந்திறை கொடுத்துத் தமரா யினரே
முரண்செறிந் திருந்த தானை இரண்டும்
ஒன்றென 1அறைந்தன பணையே நின்தேர்

ரு) முன்னியங் கூர்தி பின்னிலை யீயாது
ஊர்க பாக ஒருவினை கழிய
நன்னன் ஏற்றை நறும்பூண் அத்தி
துன்னரும் கடுந்திறற் கங்கன் கட்டி
பொன்னணி வல்விற் புன்றுறை யென்றாங்

க0) கன்றவர் குழீஇய அளப்பருங் கட்டூர்ப்
பருந்துபடப் பண்ணிப் பழையன் பட்டெனக்
கண்டது நோனான் ஆகித் திண்டேர்க்
கணையன் அகப்படக் கழுமலந் தந்த
பிணையலங் கண்ணிப் பெரும்பூட் சென்னி

கரு) அழும்பில் அன்ன அறாஅ யாணர்ப்
பழம்பல் நெல்லின் பல்குடிப் பரவைப்
பொங்கடி படிகயம் மண்டிய பசுமிளைத்
தண்குட வாயில் அன்னோள்
பண்புடை ஆகத் தின்துயில் பெறவே.

-2குடவாயிற் கீரத்தனார்.

(சொ - ள்.) க-௪. வேந்தனும் வந்து வினை முடித்தனன் - நம் அரசனும் போர் முனையி லெய்தி வினையை வெற்றியுற ஆக்கினன், பகைவரும் தம் திறை கொடுத்துத் தமர் ஆயினர் - பகைவரும் தாம் கொடுக்கக் கடவ திறையைக் கொடுத்து நம் அரசனுக்குச் சுற்றமாயி னர், முரண் செறிந்திருந்த தானை யிரண்டும் - முன்பு மாறுபாடு மிக்கி ருந்த இரு சேனைகளும், ஒன்றென - ஒரே சேனையாக, பணை அறைந் தன - முரசறையப்பட்டன;

கக. பழையன் - பழையன் என்பான்,

எ-கக. நன்னன் ஏற்றை நறும்பூண் அத்தி - நன்னனும் ஏற்றையும் நல்ல பூணினை யணிந்த அத்தியும், துன் அரும் கடுந் திறல் கங்கன் கட்டி - பகைவர் நெருங்கற்கரிய மிக்க வலி பொருந்திய கங்கனும் கட்டியும், வல்வில் பொன் அணி புன்றுறை - வலிய வில்லினை யுடைய பொன்னணி யணிந்த புன்றுறையும், என்று அவர் - என்று கூறப்பட்ட அவர்கள், அன்று குழீஇய - முன்பு கூடிப் பொருதற்கு நின்ற, அளப்பு அரும் கட்டூர் - அளத்தற்கரிய சிறப்பு வாய்ந்த


(பாடம்.) 1, ஓர்ந்தன படையே. 2. உறையூர்ச் சல்லியங் குமரனார்.