பக்கம்:அகநானூறு களிற்றியானை நிரை.djvu/104

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
45
௧௦௧
களிற்றியானை நிரை45. பாலை

[வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.]


வாடல் உழுஞ்சில் விளைநெற் றந்துணர்
ஆடுகளப் பறையின் அரிப்பன வொலிப்பக்
கோடை நீடிய அகன்பெருங் குன்றத்து
நீரிலார் ஆற்று நிவப்பன களிறட்

ரு) டாளில் அத்தத் துழுவை உகளும்
காடிறந் தனரே காதலர் மாமை
அரிநுண் பசலை பாஅய்ப் பீரத்
தெழின்மலர் புரைதல் வேண்டும் அலரே
அன்னி குறுக்கைப் பறந்தலைத் திதியன்

க0) தொன்னிலை முழுமுதல் துமியப் பண்ணிப்
புன்னை குறைத்த ஞான்றை வயிரியர்
இன்னிசை யார்ப்பினும் பெரிதே யானே
காதலற் கெடுத்த சிறுமையொடு நோய்கூர்ந்
தாதி மந்தி போலப் பேதுற்று

கரு) அலந்தனென் உழல்வென் கொல்லோ பொலந்தார்க்
கடல்கால் கிளர்ந்த வென்றி நல்வேல்
வான வரம்பன் அடன்முனைக் கலங்கிய
உடைமதில் ஓரரண் போல
அஞ்சுவரு நோயொடு துஞ்சா தேனே.

- வெள்ளி வீதியார்.

(சொ - ள்) க-௬. (தோழியே!) காதலர் - நம் காதலர், வாடல் உழுஞ்சில் வீளை நெற்று அம் துணர் - நீர்வற்றிய வாகையின் முதிர்ந்த நெற்றுக்களைக் கொண்ட கொத்து, ஆடு களப் பறையின் அரிப்பன ஒலிப்ப - கூத்தர் ஆடுங் களத்தில் ஒலிக்கும் பறையைப் போல விட்டு விட்டு ஒலித்திட, கோடை நீடிய அகன் பெருங் குன்றத்து - கோடைத் தன்மை மிக்க அகன்ற பெரிய குன்றினிடத்தே, நீர் இல் ஆர் ஆற்று - நீரில்லாத அரிய சுரநெறியில், நிவப்பன களிறு அட்டு -ஒங்கின களிற்றினைக் கொன்று, ஆள் இல் அத்தத்து உழுவை உகளும் - மக்கள் இயங்குதல் அற்ற சுரத்தே புலி திரிவதாகிய, காடு இறந்தனரே. காட்டினைக் கடந்து சென்றனரே ;

௬--அ. மாமை அரி நுண் பசலை பாஅய் - எனது மாமை நிறமா னது ஐதாய நுண்ணிய பசலை பரத்தலால், பீரத்து எழில் மலர் புரைதல் வேண்டும் - பீர்க்கின் அழகிய மலரை ஒப்பதாகும்;

அ-க௨. அலரே - ஊரில் எழும் அலரானது, அன்னி - அன்னி என்பான், குறுக்கைப் பறந்தலை - குறுக்கைப் போர்க்களத்தில், திதியன் - திதியன் என்பானது, தொல்நிலைப் புன்னை முழுமுதல்-பழையதாகிய நிலையையுடைய புன்னை மரத்தின் பெரிய அடியை, துமியப் பண்ணிக் குறைத்த ஞான்றை - வெட்டித் துண்டித்த காலத்தே,