பக்கம்:அகநானூறு களிற்றியானை நிரை.djvu/105

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
௧௦௨
[பாட்டு
அகநானூறு


வயிரியர் இன்னிசை ஆர்ப்பினும் பெரிதே - கூத்தர் எடுத்த இன்னிசைப் புகழ் முழக்கத்தினும் பெரிதாகும் ;

கஉ-௯. யான் - நான், பொலம் தார் கடல் கால் கிளர்ந்த வென்றி - பொன்னரி மாலையினையும் கடலிடத்தினைப் புடைபெயரச் செய்த வென்றியினையும், நல்வேல் - நல்ல வேலினையுமுடைய, வான வரம்பன் - வான வரம்பனது, அடல்முனைக் கலங்கிய - வலிபொருந்திய போர் முனையிற் கலங்கிய, உடை மதில் ஓர் அரண்போல - உடை மதிலாகிய ஒரு அரணைப்போல, அஞ்சுவரு நோயொடு துஞ்சாதேன் - அச்சம் பொருந்திய வருத்தத்தால் துயிலேனாகி, ஆதிமந்திபோல -ஆதி மந்தியைப்போல, காதலற் கெடுத்த சிறுமையொடு - காதலனைக் காணா தொழிந்த சிறுமையால், நோய் கூர்ந்து - மிக்க வருத்தமுற்று, அலந்தனென் உழல்வென் கொல்லோ - துன்புற்றுத் தேடித் திரிவேனோ.

(முடிபு) காதலர் காடிறந்தனர்; மாமை மலர் புரையும்; அலர், குறுக்கைப் பறந்தலை ஆர்ப்பினும் பெரிது; யான் அஞ்சு வரு நோயொடு துஞ்சாதேனாய், ஆதிமந்தி போலக் காதலற் கெடுத்த சிறுமையொடு அலந்து உழல்வேனோ.

(வி-ரை.) உழிஞ்சில் - வாகை. நெற்றந்துணர் : அம், அசை. வாகை நெற்றுக் கழைக் கூத்தரது பறைபோல் ஒலிக்கும் என்னும் கருத்து, 1ஆரியர், கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி, வாகை வெண்ணெற் றொலிக்கும்' எனக் குறுந்தொகையுள்ளும், 'உழிஞ்சில், தாறு சினை விளைந்த நெற்ற மாடுமகள், அரிக்கோற் பறை யினை யென வொலிக்கும்' (கருக) என இந் நூலுள்ளும் வருதல் காண்க. உகளல் - ஈண்டுத் திரிதல். பீரத்து - அத்து, சாரியை. வேண்டும் என்பது படும் என்றதுபோல் நின்றது. ஆதிமந்தி காதலற் பிரிந்து அவனைத் தேடி யுழந்தமை, இதனாலும், 'பொருநனைக் காண்டிரோவென, ஆதிமந்தி பேதுற்றினைய' (எ௬) எனவும், ஆட்ட னத்தியைக் காணீ ரோவென . . . காதலற் கெடுத்த, ஆதிமந்தி போல்' (உ௩௬) எனவும் இந் நூலுட் பின் வருவனவற்றாலும் 2'மள்ளர் குழீஇய' என்னும் குறுந்தொகைச் செய்யுளாலும் பெறப்படும். ஆதிமந்திபோல என்னும் உவமையால், வெள்ளி வீதியும் கணவனைக் கெடுத்துத் தேடி யுழந்தமை பெற்றாம்; அது, 'வெள்ளி வீதியைப்போல நன்றுஞ் செலவயர்ந் திசினே யானே' (கசஎ) என்னும் இந்நூற் செய்யுளானும், 3'கன்று முண்ணாது' என்னும் குறுந்தொகைச் செய்யுளானும் பெறப்படுதலுங் காண்க.46. மருதம்

[வாயில் வேண்டிச் சென்ற தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது.]

சேற்று நிலை முனைஇய செங்கட் காரான்
ஊர்மடி கங்குலின் நோன்தளை பரிந்து
கூர்முள் வேலி கோட்டின் நீக்கி
நீர்முதிர் பழனத்து மீனுடன் இரிய


1. குறுந். எ. 2. குறுந். ௩க. 3. குறுந். உஎ.