பக்கம்:அகநானூறு களிற்றியானை நிரை.djvu/107

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
௧௦௪
[பாட்டு
அகநானூறு


க௪-௬. என் ஒள் தொடி நெகிழினும் நெகிழ்க - எனது ஒள் ளிய வளையல் நெகிழ்ந்து வீழினும் வீழ்க, சென்றீ பெரும - நீ முன்னிய விடத்திற்குச் செல்வாயாக, நின் தகைக்குநர் யாரோ - நின்னைத் தடுப்பவர் யாரோதான்!

(முடிபு) ஊர! நிற்புலக்கேம், யாரையோ; ஊரார் ஒருத்தியைத் தந்து வதுவை அயர்ந்தனை என்ப; எந்தை! அஃது யாம் கூறேம்; தொடி நெகிழினும் நெகிழ்க; சென்றீ பெரும; நிற்றகைக்குநர் யாரோ.

காரான், பரிந்து, நீக்கி, மயக்கி, ஆரும் ஊர் என்க.

(வி - ரை.) எருமையைக் காரான் என்றார், 1'பெற்றமும் எருமையும் மரையும் ஆவே' என்னும் சூத்திரத்தால். இராக்கால மாதலின், வண்டூது பனி மலர் என்றது, வண்டு உள்ளே ஊதும் மலர் என்க. யாரையோ : ஐகாரம் முன்னிலைக்கண் வந்தது ; சாரியையுமாம். 'யாரையோ நிற் புலக்கேம்' என்றது, நின்னொடு புலத்தற்கு ஓரியைபும் இல்லை யென்றபடி. பிறளும் ஒருத்தியை என்பது பாடமாயின், பிறளாகிய ஒருத்தியை என்க. வதுவை அயர்ந்தனை யென்று கூறுவர்; கூறுபவர் அச் செய்தியை நம்மனைக்கட் கொணர்ந்து கூறுவர் எனலுமாம். 2'அன்னை யென்னை என்றலு முளவே" என்னுஞ் சூத்திரத்து, உம்மையாற் பிறவுமுள வென்பது பெறுதலின், தலைவனை எந்தை என்றா ளென்க. 3'எந்தை தன் உள்ளங் குறைபடா வாறு' எனக் கலியுள்ளும் வருவது காண்க. நெகிழ்தல் - கழலுதல். என் தொடி யென்றாள், தான் அவள் என்னும் வேற்றுமை யின்மையால். இனி, ஒண்டொடி யென்பதனை ஆகு பெயரால் தலைவி யெனக் கொண்டு, அவள் மெலியினும் மெலிகவென்று உரைத்தலுமாம். செல் என்பது சென் றீ எனத் திரிந்து நின்றது. யாரோ : ஆசிரியம் ஓகாரத்தால் முடிந்தது.

(உ - றை.) 'காரான் தனக்கு நிலையென்று புகுதப்பட்ட கொட்டிலை நீராலும் சாணாகத்தாலும் தானே சேறாக்கிக்கொண்டு, தளையையும் அறுத்துக் கொண்டு, பழனத்துக்குக் காவலாகிய வேலியையும் கோட்டாலெடுத்து மீன்கள் இரியத் தாமரையைச் சூழ்ந்த வள்ளையை மயக்கி, மலர்ச்சியின்றி வண்டொடு குவிந்த தாமரையை ஆர்ந்தாற்போல, நீயே ஆதரித்துக்கொள்ளப்பட்ட இவளை, நீ தானே வேறுபடுத்தி, நாணமாகிய தளையையும் அறுத்துக்கொண்டு, பரத்தையர்க்குக் காவலாகிய விறலியையும் பாணனாகிய கோட்டாலே நீக்கி, அப் பரத்தையருடனுறையும் தோழிமார் இரிய, அப் பரத்தையருடைய தாய்மாரையும் மயக்கி, அகமலர்ந்து உன்னை எதிரேற்றுக் கொள்ளாத மகளிரை நுகர்வானொருத்தன் அல்லையோ என்றவாறு' என்றனர் குறிப்புரைகாரர்.

(மே - ள்.) 4'அவனறி வாற்ற' என்னும் தலைவி கூற்று நிகழுமிடம் கூறுஞ் சூத்திரத்து, ' செல்லாக் காலை செல்கென விடுத்தலும்' என்பதற்கு, 'தலைவன் செல்லான் என்பது இடமும் காலமும் பற்றி அறிந்த


1. தொல். மரபு. ௬௦. 2. தொல். பொருளியல். ௫உ, 3. கலி. ௬க. 4. தொல். கற்பு. ௬.